சிறப்புப்பாயிரம்15

என்றாரெனினு    மமையும்.    அங்ஙனேல்    புறவுரையாகிய   பாயிரம்
நூற்பொருளைச் சுருக்கிப் பருப்பொருட்டாக எங்ஙனம் விளக்குமெனின்?
 

பொதுப்பாயிரம் ;
 

"ஈவோன் றன்மை யீத  லியற்கை கொள்வோன் றன்மை கோடன் மரபு"
ஆகி,  எல்லா  நூன்முகத்து   முரைக்கப்படுதலின்   அஃதொழித்தேனைச்
சிறப்புப்பாயிரமே  தன்னா  லுரைக்கப்படுநூற் கின்றியமையாச் சிறப்பிற்றாய்
நிற்றலின்,   அதுவே    பருப்பொருட்டாய்    நூற்பொருளைச்   சுருக்கி
விளக்குமெனக் கோடும். அவற்றுள்ளும் நுதலிய பொருளே நூற்பொருளைச்
சுருக்கிப்   பருப்பொருட்டாய்ப்  பெரிதும்  விளக்கி  நிற்குமென்க. நுதலிய
பொருளென்றதனால்  நூனுதலியதேயன்றி  அதிகார  நுதலியதூஉம்,  ஓத்து
நுதலியதூஉம்,    சூத்திர   நுதலியதூஉம்   நுதலிய   பொருளாயடங்கிப்
பாயிரமாகக்  கொள்ளப்படு மென்க. இப் பாயிரங்கள்  நூற்பொருளை நன்கு
விளக்குமென்க. பேராசிரியர்;   "மேற்கிளந்தெடுத்த"  (மர - 100)  என்னும்
மரபியற்   சூத்திரவுரையுள்,  "இனி  மேற்கிளந்தெடுத்த பாயிரவிலக்கணஞ்
சூத்திரத்தோடு  பொருந்துங்காற்  பொதுப்பாயிர  விலக்கணம்  பொருந்தா;
சிறப்புப்பாயிரவிலக்கண  மெட்டுமே  பொருந்துவன" வென்று கூறுதலானே
சிறப்புப்பாயிரம் நூற்கின்றியமையாத  தென்பதூஉம்,  அவர், "ஒத்த சூத்திர
முரைப்பிற்   காண்டிகை"  (மர - 98)  என்னுஞ்  சூத்திர   வுரையுள்ளே,
"சூத்திரவுரையுட்   பாயிரவுரை    மயங்கிவருவன    உள,   1அங்ஙனம்
மயங்கிவருவன  எவையெனின் ?  'எழுத்தெனப்படுப' என்னுஞ் (எழு - 1)
சூத்திரத்தினை (முதலில் எடுத்து) நிறுவி என்பது சூத்திரம் எனக் கூறி, பின்
இவ்   வதிகார   மென்ன    பெயர்த்தோ   வெனவும்   இவ்   வதிகார
மென்னுதலிற்றோ வெனவும் வினாவிப்  பின் இன்ன பெயர்த்தனவும் இவை
நுதலிற்றெனவும் அவற்றிற்கு விடை கூறுவனவும், இவ் வதிகார மெனைத்துப்
பகுதியா   லுணர்த்தினானோ   வென   வினாவி   இனைத்துப் பகுதியால்
உணர்த்தினானென   விடைகூறுவதூஉம்,  ஓத்து  முதற்கண்ணே இவ்வாறு
வினாவி விடை கூறுவதூஉம், சூத்திரமுதற்கண் இச்சூத்திர வென்னுதலிற்றோ
வென   வினாவி   விடை   கூறுவதூஉம்   போல்வன   வென்க" என்று
உரைத்தலினாலே சிறப்புப்பாயிரம்  நூற்பொருளைச் சுருக்கி  விளக்கற்குரிய
தென்ப   தூஉம்  பெறப்படுதல்காண்க.   பேராசிரியர்   கருத்தைத்தழுவிச்
சிவஞான முனிவரும் "இனி, வாய்ப்பக் காட்டல்" என்றதனாலே இத்துணைச்
சிறப்பிலவாய்   அவ்வவற்றிற்  கினமாய்க்  கூறப்படுவனவு   முளவென்பது
பெற்றாம். அவைதா நூனுதலிய பொருளேயன்றிப் படல நுதலியதூஉம் ஓத்து
நுதலியதூஉஞ்   சூத்திர   நுதலியதூஉங்   கூறுதலும்   என்றும்,   இவை
நூன்முகத்துக்   காட்டப்படுதலே   யன்றிப் படல முகத்தும் ஓத்துமுகத்தும்
சூத்திரமுகத்தும் காட்டவும்படும் என்றும் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுட்
கூறுதலுங் காண்க. நூற்பொரு


1. அங்ஙனம் 'மயங்கிவருவன எவையெனின்? என்பதுமுதல்,...........என்க'
என்பது  வரையும்  உள்ள வாக்கியம் மாணாக்கன் விளங்கும் பொருட்டுப்
பேராசிரியர் கருத்தைத் தழுவி யாமெழுதிய வாக்கியமாகும்.