304 புள்ளிமயங்கியல்

392.

நூறூர்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக்
கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே.

 

இஃது எய்தியது  முழுவதூஉம் விலக்கிற்று, உகரங்கெட்டு அதன்மேலே
நெடுமுதல் குறுகாது என்றலின்.
 

இதன் பொருள் : நூறு   ஊர்ந்து   வரூஉம்  ஆயிரக்   கிளவிக்கு -
அவ்வேழென்பது   நூறென்னுஞ்  சொன்மேல்   வரும்   ஆயிரமென்னுஞ்
சொல்லிற்கு,  கூறிய  நெடுமுதல்  குறுக்கமின்று  -  முற்கூறிய  நெடுமுதல்
குறுகி உகரம் பெறுதலின்று என்றவாறு.
 

உதாரணம் : ஏழ்நூறாயிரம் என வரும்.
 

கூறிய      என்றதனான்       நெடுமுதல்குறுகி       1உகரம்பெற்று
எழுநூறாயிரமெனவும் வரும்.
 

இதனானே ஏழாயிரமென மேல் முதனிலை குறுகாமையுங் கொள்க.
 

இதனானே  எழுஞாயிறு  எழுநாள்  எழுவகை  என  இயல்பு கணத்து
நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலும் கொள்க. 
 

(97)
 

393.

ஐயம் பல்லென வரூஉ மிறுதி
யல்பெய ரெண்ணினு மாயிய னிலையும்.

 

இதுவும் அது.
 

இதன் பொருள் : 2ஐ   அம்    பல்    என   வரூஉம்   இறுதி -
அவ்வேழன்முன்னர்  ஐயென்றும்  அம்மென்றும்  பல்லென்றும்  வருகின்ற
இறுதிகளையுடைய,  அல்பெயர்   எண்ணினும்  -    பொருட்பெயரல்லாத
எண்ணுப்பெயராகிய  தாமரை  வெள்ளம் ஆம்பல் என்பன வந்தாலும், ஆ
இயல் நிலையும் - நெடுமுதல் குறுகி உகரம்பெறாது அவ்வியல்பின்கண்ணே
நின்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஏழ்தாமரை ஏழ்வெள்ளம் ஏழாம்பல் என வரும். 
 

(98)

1. ஆசிரியர்,   குறுக்கமின்றே   என்று  கூற  உரைகாரர்  வருமெனல்
பொருந்தாது. அவ்வாறு வருவது பிற்கால வழக்காம்.
 

2. தாமரை - ஐ   இறுதி ;  வெள்ளம் - அம்  இறுதி.  ஆம்பல் - பல்
இறுதி.