புள்ளிமயங்கியல்305

394.

உயிர்முன் வரினு மாயிய றிரியாது.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : உயிர்முன்  வரினும் -  அவ்வேழென்பதன் முன்னர்
அளவுப்பெயரும்  எண்ணுப்பெயருமாகிய  உயிர் முதன்மொழி வரினும், ஆ
இயல்  திரியாது -  நெடுமுதல்  குறுகி  உகரம் பெறாது முடியும் இயல்பிற்
றிரியாது முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஏழகல் ஏழுழக்கு ஏழொன்று ஏழிரண்டு என வரும். 
 

(99)
 

395.

கீழென் கிளவி யுறழத் தோன்றும்.
 

இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் உறழ்ச்சி கூறுகின்றது.
 

இதன் பொருள் : கீழ் என்  கிளவி  உறழத் தோன்றும் - கீழென்னுஞ்
சொல் உறழ்ச்சியாய்த் தோன்றி முடியும் என்றவாறு.
 

தோன்றுமென்றதனான்  நெடுமுதல்   குறுகாது  வல்லெழுத்துப்பெற்றும்
பெறாதும்  வருமென்ற  இரண்டும்   உறழ்ச்சியாய்  வருமென்று   கொள்க.
இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.
 

உதாரணம் : கீழ்க்குளம் கீழ்குளம் சேரி தோட்டம் பாடி என வரும். 
 

(100)
 

396.

ளகார விறுதி ணகார வியற்றே.
 

இது   நிறுத்தமுறையானே   ளகார    ஈற்றுச்சொல்   வேற்றுமைக்கட்
புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ளகார  இறுதி  ணகார  இயற்று  -  ளகார ஈற்றுப்
பெயர்  ணகார  ஈற்றின்  இயல்பிற்றாய்  வன்கணம்  வந்துழி  டகாரமாய்த்
திரிந்துமுடியும் என்றவாறு.
 

உதாரணம் : முட்குறை சிறை தலை புறம் என வரும்.
 

(101)