புள்ளிமயங்கியல்307

இதன் பொருள் : தகரம்  வரூஉங்  காலையான - தகர  முதன்மொழி
வருமொழியாய்  வருங்காலத்து, ஆய்தம்  நிலையலும் வரைநிலை யின்று -
ளகாரம் டகாரமாகத் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்து நிற்றலும் நீக்கும்
நிலைமையின்று என்றவாறு.
 

உதாரணம் : முஃடீது முட்டீது என வரும். 
 

(104)
 

400.

நெடியத னிறுதி யியல்பா குநவும்
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டு மொழியுமா ருளவே.

 

இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : நெடியதன்  இறுதி இயல்பு ஆகுநவும் - அவ் வீற்று
நெடியதன்  இறுதி   திரியாது  இயல்பாய்  முடிவனவற்றையும்,  வேற்றுமை
அல்வழி   வேற்றுமை   நிலையலும்   -   வேற்றுமையல்லாத    இடத்து
வேற்றுமையின்    இயல்பையுடையனவாய்த்     திரிந்து    முடிதலையும்,
போற்றல்வேண்டும்    மொழியுமாருள   -     போற்றுதல்    வேண்டுஞ்
சொற்களும் உள என்றவாறு.
 

உதாரணம் : கோள்கடிது  வாள்கடிது  சிறிது  தீது  பெரிது  எனவும்,
'புட்டேம்பப் புயன்மாறி' (பட்டினப் பாமாலை - 4) எனவும் வரும்.
 

போற்றல்வேண்டும்  என்றதனால்  உதளங்காய்  செதிள் பூ தோல் என
அம்முப்  பெறுதலுங்  கொள்க.  உதளென்பது யாட்டினை உணர்த்துங்கால்
முற்கூறிய  முடிபுகள்  இருவழிக்கும்  ஏற்றவாறே   முடிக்க.   உதட்கோடு
உதள்கடிது  உதணன்று என ஒட்டுக. 'மோத்தையுந் தகரு முதளு மப்பரும்'
(மரபியல் - 47) என்றார் மரபியலில். 
 

(105)
 

401.

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.
 

இஃது இவ் வீற்றுத் தொழிற்  பெயர்க்கு இருவழியும் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.