இதன் பொருள் : தொழிற்பெயரெல்லாம் - ளகார ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம் இருவழியும், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர்போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : துள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், துள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். |
எல்லா மென்றதனானே இருவழியுந் தொழிற் பெயர்கள் உகரமும் வல்லெழுத்தும் பெறாது திரிந்தும் திரியாதும் முடிவனவுங் கொள்க. கோள்கடிது கோட்கடிது, கோள்கடுமை கோட்கடுமை என்பன போல்வன பிறவும் வரும். |
இனி வாள்கடிது வாட்கடிது சிறிது தீது பெரிது எனவும் வாள்கடுமை வாட்கடுமை எனவுங் காட்டுக. வாள் - கொல்லுதல். |
(106) |
402. | இருளென் கிளவி வெயிலிய னிலையும். |
|
இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : இருள் என் கிளவி - இருளென்னுஞ் சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வெயிலியல் நிலையும் - வெயிலென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : இருளத்துக்கொண்டான் இருளிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். |
சாரியை வரையாது கூறியனமையின் இயல்பு கணத்தும் ஒட்டுக. இருளத்துஞான்றான் நீண்டான் மாண்டான் இருளின் ஞான்றான் நீண்டான் மாண்டான் என வரும். |
(107) |
403. | புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. |
|
இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, திரிபும் இயல்பும் விலக்கித் தொழிற்பெயர்விதி வகுத்தலின். |