இதன் பொருள் : புள்ளும் வள்ளும் - புள்ளென்னுஞ் சொல்லும் வள்ளென்னுஞ் சொல்லும் இருவழிக்கண்ணும், தொழிற் பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : புள்ளுக்கடிது வள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், புள்ளுக்கடுமை வள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். |
இதனைத் 'தொழிற்பெய ரெல்லாம்' (எழு - 401) என்பதன்பின் வையாததனால் இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவுங் கொள்க. புட்கடிது வட்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட்கடுமை வட்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், புண்ஞான்றது நீண்டது மாண்டது எனவும், புண்ஞாற்சி நீட்சி மாட்சி எனவும் வரும். புள்ளுவலிது புள்வலிது புள்ளுவன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெறாதும் வருதலின் 'நின்ற சொன்மு னியல்பாகும்' (எழு - 144) என்றதனான் முடியாமை உணர்க. இது வள்ளிற்கும் ஒக்கும். |
(108) |
404. | மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. |
|
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, 'உயிரீறாகிய உயர்திணைப் பெயர்' (எழு - 153) என்பதனுட் கூறிய இயல்பு விலக்கித் திரிபு வகுத்தலின். |
இதன் பொருள் : மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி - மக்களென்னும் பெயர்ச்சொல்லிறுதி இயல்பேயன்றி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து - தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து என்றவாறு. |
தக்கவழியென்றார் பெரும்பான்மை மக்கள் உடம்பு உயிர் நீக்கிக் கிடந்தகாலத்தின் அஃது இம்முடிவுபெறும் என்றற்கு. |
உதாரணம் : மக்கட்கை செவி தலை புறம் 'இக்கிடந்தது மக்கட்டலை' என்பதனான் அவ்வாறாதல் கொள்க. 1மக்கள் கை |
|
1. உயிருள்ள மக்களை யுணர்த்தும் மக்கள் என்னுஞ் சொல் திரியாது என்றபடி. |