310 புள்ளிமயங்கியல்

செவி தலை புறம் எனத் திரியாது நின்றது உயிருண்மை பெற்று.
 

இனிச் சிறுபான்மை மக்கட் பண்பு மக்கட்சுட்டு எனவும் வரும்.
 

(109)
 

405.

உணரக் கூறிய புணரியன் மருங்கிற்
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே.

 

இஃது  இவ்வோத்தின்கண்  எடுத்தோத்தானும்  இலேசானும்  முடியாது
நின்றவற்றிற்கெல்லாம்     இதுவே     ஓத்தாகக்    கொண்டு    சாரியை
பெறுவனவற்றிற்குச்   சாரியையும்,   எழுத்துப் பெறுவனவற்றிற்கு எழுத்துங்
கொடுத்து முடித்துக்கொள்க என்கின்றது.
 

இதன் பொருள் : உணரக்  கூறிய  புணரியன்  மருங்கின்  - உணரக்
கூறப்பட்ட  புள்ளியீறு  வருமொழியோடு  புணரும்  இயல்பிடத்து,  கண்டு
செயற்கு  உரியவை  -  மேல்  முடித்த  முடிபன்றி   வழக்கினுட்  கண்டு
முடித்தற்கு உரியவை  தோன்றியவழி,  கண்ணினர் கொளல் - அவற்றையுங்
கருதிக்கொண்டு ஏற்றவாறே முடிக்க என்றவாறு.
 

உதாரணம் : மண்ணப்பத்தம்  என அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப்
பெற்றது.  மண்ணங்கட்டி என  அம்முப்  பெற்றது.  பொன்னப்பத்தம் என
னகர  ஈறு  அக்குப்  பெற்றது.  பொன்னங்கட்டி  என  அம்முப் பெற்றது.
கானங்கோழி  என  வேற்றுமைக்கண்  அம்முப்  பெற்றது. மண்ணாங்கட்டி
கானாங்கோழி  என்பன மரூஉ. வேயின்றலை  என யகர ஈற்று உருபிற்குச்
சென்ற  சாரியை  பொருட்கட்   சென்றுழி  வல்லெழுத்துக்  கெடுக்க.  நீர்
குறிது என ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பாயிற்று. வேர்குறிது வேர்க்குறிது
இது  ரகர  ஈறு அல்வழி உறழ்ச்சி. வடசார்க்கூரை மேல்சார்க்கூரை இவை
வல்லெழுத்து  மிக்க மரூஉமுடிபு. அம்பர்க்கொண்டான் இம்பர்க்கொண்டான்
உம்பர்க்கொண்டான்  எம்பர்க்கொண்டான்   என  இவ்வீறு   ஏழனுருபின்
பொருள்பட வந்தன  வல்லொற்றுப்  பெற்றன.  தகர்க்குட்டி புகர்ப்போத்து
என்பன  பண்புத்தொகை  கருதிற்றேல்  ஈண்டு முடிக்க. வேற்றுமையாயின்
முன்னர் முடியும். விழலென்னும்  லகர  ஈறு  வேற்றுமைக்கண் றகரமாகாது
னகரமாய்  முடிதல்  கொள்க.  விழன்காடு  செறு  தாள் புறம் என வரும்.
கல்லம்பாறை உசிலங்கோடு எலியாலங்