புள்ளிமயங்கியல்311

காய்  புடோலங்காய்  என  அவ்  வீறு  அம்முப்பெற்றது.  கல்லாம்பாறை
என்பது மரூஉ. அழலத்துக் கொண்டான்  என  அவ் வீறு அத்துப்பெற்றது.
அழுக்கற்போர்  புழுக்கற்சோறு  எனபன  அவ்   வீற்று   அல்வழித்திரிபு.
யாழ்குறிது  என்பது  ழகர  ஈற்று  அல்வழியியல்பு.  வீழ்குறிது வீழ்க்குறிது
என்பன ஈற்று அல்வழியுறழ்ச்சி. தாழப்பாவை என்பது  அவ்வீற்று அல்வழி
அக்குப்பெற்றது.  யாழின்கோடு  செய்கை  தலை  புறம்  என அவ் வீற்று
உருபிற்குச் சென்ற  சாரியை  பொருட்கட்சென்றுழி  வல்லெழுத்த  வீழ்க்க.
முன்னாளை      வாழ்வு      முன்னாளைப்பரிசு     ஒருநாளைக்குழவி
ஒருதிங்களைக்குழவி  என்றாற் போல்வன ளகார ஈறு ஐகாரமும் அதனோடு
வல்லெழுத்தம் பெறுதல் கொள்க. பிறவும் இவ்வோத்தின் வேறுபட வருவன
வெல்லாங்  கொணர்ந்து  இதனான்  முடிக்க. குளத்தின்புறம் மரத்தின்புறம்
என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலுங் கொள்க.
 

இனிக்   'கடிசொல்    லில்லை'   (சொல்   -   452)   என்பதனான்
வழக்கின்கண்ணுஞ்    செய்யுட்கண்ணும்    வந்து    திரிந்து    முடியுஞ்
சொற்களும்   உள.   அவற்றைக்   கண்ணினர்  கொளலே  என்பதனான்
மண்ணுக்குப்போனான்    பொன்னுக்குவிற்றான்    பொருளுக்குப்போனான்
நெல்லுக்குவிற்றான்  கொள்ளுக்குக்கொண்டான்  பதினேழு  என்றாற்போல
வழக்கின்கண் உகரம் பெறுவனவும், 'விண்ணுக்குமேல்' 'மண்ணுக்குகாப்பண்',
 

'பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோன்றினவா-னெல்லுக்கு
நூறோஒஒ நூறென்பா ணுடங்கிடைக்கும் வன்முலைக்கு
மாறோமா லன்றளந்த மண்.'

 

என்றாற்போலச் செய்யுட்கண் உகரம் பெறுவனவும், பிறவும் முடிக்க.
 

பற்கு  நெற்கு   என்பன  முதலியனவுங்  கொள்க.  இவை   உருபின்
பொருள்பட்  வாராது  உருபின்கண்  வந்தனவேனும்  ஈண்டுக் காட்டினாம்,
ஆண்டுப்  'புள்ளியிறுதியும்'  (எழு - 202)  என்னும்  உருபியற் சூத்திரத்து
இலேசு   கோடற்கு   இடனின்றென்று   கருதி.   இனி   அச்சூத்திரத்துத்
'தேருங்காலை' என்றதனான் முடித்தலும் ஒன்று. 
 

(110)
 
புள்ளிமயங்கியல் முற்றிற்று.