குற்றியலுகரப்புணரியல்317

தோற்றம் என்றதனான் ஏனைக்கணத்தும்  இம்  முடிபு கொள்க. யாட்டு
ஞாற்சி  நிணம்  மணி  வால்  அதள்  எனவும், முயிற்று  ஞாற்சி  நிணம்
முட்டை வலிமை அடை ஆட்டம் எனவும் வரும். 
 

(6)
 

412.

ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
யத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே.
இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.

 

இதன் பொருள் : ஒற்று   இடை   இனம்  மிகா   மொழியுமாருள -
முற்கூறிய  இரண்டனுள்  இனவொற்று  இடைமிக்கு  முடியாத மொழிகளும்
உள,  வல்லெழுத்து  மிகல் அத்திறத்தில்லை - வல்லெழுத்து மிக்குமுடிதல்
அக்கூற்றுளில்லை என்றவாறு.
 

உதாரணம் : நாகுகால்  செவி  தலை புறம் எனவும், வரகுகதிர் சினை
தாள் பதர் எனவும் வரும்.
 

அத்திற  மென்றதனான்  உருபிற்கு   எய்திய   சாரியை   பொருட்கட்
சென்றவழி  இயல்புவல்லெழுத்து  வீழ்க்க.  யாட்டின்கால்   முயிற்றின்கால்
நாகின்கால் வரகின்கதிர் என வரும்.
 

அத்திறமென்றதனான்  ஏனைக்கணத்தும்   ஒற்றிடைமிகாமை  கொள்க.
நாகுஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என ஒட்டுக. 
 

(7)
 

413.

இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரு
நடையா யியல வென்மனார் புலவர்.

 

இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : இடையொற்றுத்  தொடரும்  ஆய்தத்  தொடரும் -
இடையொற்றுத்  தொடர்மொழிக்  குற்றுகர  ஈறும் ஆய்தத் தொடர்மொழிக்
குற்றுகர   ஈறும்,  நடைஆ  இயல  என்மனார்  புலவர்   -   நடைபெற
நடக்குமிடத்து  முற்கூறிய  அவ்  வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர்
புலவர் என்றவாறு.
 

உதாரணம் : தெள்குகால் சிறை தலை புறம் எனவும், எஃகு கடுமை
சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.

(8)