வந்த என்றதனான் இவ்விரண்டிற்கும் உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கொக்கின்கால் குரங்கின்கால் என வரும். |
எல்லாமென்றதனாற் பறம்பிற்பாரி குறும்பிற்சான்றார் என மெல்லொற்றுத் திரியாமையுங் கொள்க. |
ஒற்றென்ற மிகுதியான் இயல்புகணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம் முகம் விரல் உகிர் என மெல்லொற்றுத் திரிந்துவருமாறு கொள்க. சிலப்பதிகாரமென்பதும் அது. |
வன்றொடர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல் 'ஞநமயவ' (எழு - 144) என்பதனான் முடியும். |
(9) |
415. | மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. |
| |
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது, அம்மு வகுத்தலின். |
இதன் பொருள் : மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை - குற்றிய லுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ்சாரியை அம்முச் சாரியை என்றவாறு. |
உதாரணம் : தேக்கங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
கமுகங்காய் தெங்கங்காய் சீழ்க்கம்புல் கம்பம்புல் பயற்றங்காய் என்றாற்போலும் புல்லினையும் மரமென அடக்கி மாறுகொளக் கூறலெனத் தழீஇக்கொண்ட சிதைவென்பதாம் இச் சூத்திரமென்று உணர்க. |
(10) |
416. | மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. |
| |
1இது மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது. |
இதன் பொருள் : மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள - மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாது மெல்லொற்றாய் முடியும் மரப்பெயரும் உள என்றவாறு. |
|
1. இச் சூத்திரம், 414 - ம் சூத்திரத்தால், மென்றொடர்மொழிக்கு எய்திய விதியை ஒருமருங்கு மறுக்கின்றது. |