418. | ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉ மக்கிளை மொழியு முளவென மொழிப |
|
இது மென்றொடர் மொழியுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. |
இதன் பொருள் : ஒற்றுநிலை திரியா அக்கொடு வரூஉம் - ஒற்று முன்னின்ற நிலைதிரியாது அக்குச் சாரியையோடும் பிற சாரியையோடும் வரும், அக்கிளை மொழியும் உளஎன மொழிப - அக்கிளையான சொற்களும் உள என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. |
இதற்கு உம்மையை முன்னர் மாறுக. |
உதாரணம் : குன்றக்கூகை மன்றப்பெண்ணை என வரும். உம்மையாற் கொங்கத்துழவு வங்கத்துவாணிகம் என அத்தும் பெற்றன. |
நிலையென்றதனான் ஒற்று நிலைதிரியா அதிகாரத்துக்கண் வருஞ் சாரியைக்கு இயைபு வல்லெழுத்து வீழ்க்க. அக்கிளையென்றார், இரண்டு சாரியை தொடர்ந்து முடிவனவும் உளவென்றற்கு பார்ப்பனக்குழவி சேரி தோட்டம் பிள்ளை என அன்னும் அக்கும் வந்தன. இவற்றிற்கு உடைமை விரிக்க. பார்ப்பினுட்குழவி என்றுமாம். பார்ப்பானாகிய குழவி என்றால் 1ஈண்டு முடியாதென்று உணர்க. பார்ப்பன மகன் பார்ப்பன வனிதை என்பனவும் 2பார்ப்பான் சாதி உணர்த்தின. |
(13) |
419. | எண்ணுப்பெயர்க் கிளவி யுருபிய னிலையும். |
|
இது குற்றுகர ஈற்று எண்ணுப் பெயரோடு பொருட்பெயர் முடிக்கின்றது. |
இதன் பொருள் : எண்ணுப்பெயர்க் கிளவி - எண்ணுட் பெயராகிய சொற்கள் பொருட் பெயரோடு புணருமிடத்து, |
|
1. ஈண்டு முடியாதென்றது னகரவீறாதலின். பார்ப்பான் சாதி என்றார் : பார்ப்பன மகன் என்பதற்கு பார்ப்பு என்பது நிலைமொழியென அறிவித்தற்கு. பார்ப்பினுடைய மகன் என விரிக்க. |
2. பார்ப்பாரச் சாதி எனவும் பாடம். |