322குற்றியலுகரப்புணரியல்

உருபியல்   நிலையும் - உருபு   புணர்ச்சியின்  இயல்பின்கண்ணே நின்று
அன்பெற்றுப் புணரும் என்றவாறு.
 

உதாரணம் : ஒன்றன்காயம்  இரண்டன்காயம் சுக்கு தோரை பயறு என
ஒட்டுக.  1ஒன்றனாற்கொண்ட  காயமென  விரியும்.  வருமொழி  வரையாது
கூறினமையின்,  இயல்புகணத்துக்கண்ணுங்  கொள்க  ஒன்றன்ஞாண்   நூல்
மணி  யாழ்  வட்டு  அடை என வரும். மேலைச் சூத்திரத்து 'நிலை' (எழு
- 418) என்றதனான் இயைபு வல்லெழுத்து வீழ்க்க.
 

(14)
 

420.

வண்டும் பெண்டு மின்னொடு சிவணும்.
 

இது மென்றொடர்மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிவு கூறுகின்றது.
 

இதன் பொருள் : வண்டும்    பெண்டும்    இன்னொடு   சிவணும் -
வண்டென்னுஞ்   சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன்சாரியையோடு
பொருந்தி முடியும் என்றவாறு.
 

உதாரணம் : வண்டின்கால்   பெண்டின்கால்   என   வரும்.  இதற்கு
முற்கூறிய இலேசினான் வல்லெழுத்து வீழ்க்க. 
 

(15)
 

421.

பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்.
 

இது   மேற்கூறியவற்றுள்   ஒன்றற்கு    எய்தியதன்மேற்   சிறப்புவிதி
கூறுகின்றது.
 

இதன் பொருள் : பெண்டு   என்  கிளவிக்கு  அன்னும்  வரையார் -
பெண்டென்னுஞ் சொற்கு  இன்னேயன்றி அன்சாரியை வருதலையும் நீக்கார்
ஆசிரியர் என்றவாறு.
 

உதாரணம் : பெண்டன்கை செவி தலை புறம் என வரும். 
 

(16)
 

422.

யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய
வாய்த விறுதியு முருபிய னிலையும். 

 

இஃது  ஈரெழுத்    தொருமொழிக்    குற்றியலுகரத்துள்   ஒன்றற்குஞ்
சுட்டுமுதலாகிய  ஆய்தத்  தொடர்மொழிக்  குற்றிய  லுகரத்திற்கும்  வேறு
முடிபு கூறுகின்றது.


1. ஒன்று - ஒரு காசு. காயம் - சரக்கு.