இதன் பொருள் : யாதுஎன் இறுதியுஞ் சுட்டுமுதலாகிய ஆய்த இறுதியும் - யாதென்னும் ஈறுஞ் சுட்டெழுத்து முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுச் சுட்டுமுதலிறுதி ஆய்தங்கெட்டு முடியும் என்றவாறு. |
உதாரணம் : யாதன்கோடு அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செவி தலை புறம் என வரும். ஆய்தங்கெடா முன்னே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின்மேல் ஏற்றுக. ஆய்தங் கெட்டால் அது முற்றுகரமாய் நிற்றலின். |
(17) |
423. | முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டு மல்வழி யான. |
|
இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகரத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : முன்னுயிர் வருமிடத்து - சுட்டுமுதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈற்றின் முன்னே உயிர் முதன்மொழி வருமிடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தவொற்று முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன், அல்வழியான - அல்வழிக்கண் என்றவாறு. |
உதாரணம் : அஃது இஃது உஃது என நிறுத்தி அடை ஆடை இலை ஈயம் உரல் ஊர்தி எழு ஏணி ஐயம் ஒடுக்கம் ஓக்கம் ஒளவியம் என ஒட்டுக. |
முன்னென்றதனான் வேற்றுமைக்கண்ணும் இவ் விதி கொள்க. 1அஃதடைவு அஃதொட்டம் என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. இன்னும் இதனானே ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க. |
(18) |
424. | ஏனைமுன் வரினே தானிலை யின்றே. |
|
இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது. |
|
1. அஃதடைவு - அதனை அடைதல் என விரியும். அஃதொட்டம் - அதனை ஒட்டல் என விரியும். |