324குற்றியலுகரப்புணரியல்

இதன் பொருள் : ஏனை முன் வரின் - முற்கூறிய  ஈறுகளின் முன்னர்
உயிர்க்கண் மல்லன வருமாயின், தான்நிலையின்று - அவ் வாய்தங் கெட்டு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : அதுகடிது  இதுகடிது  உதுகடிது  சிறிது   தீது   பெரிது
ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என ஒட்டுக. 
 

(19)
 

425.

அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ்
சொல்லிய பண்பி னியற்கை யாகும்.

 

இஃது ஆறு ஈற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லுமிடத்து,
எல்லா மொழியும்  -  ஆறு  ஈற்றுக்  குற்றுகரமும்,  சொல்லிய  பண்பின்
இயற்கை  யாகும்  -  மேல் ஆசிரியன் கூறிய குணத்தையுடைய இயல்பாய்
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நாகுகடிது     வரகுகடிது    தெள்குகடிது    எஃகுகடிது
குரங்குகடிது  சிறிது தீது  பெரிது என வரும். ஏனைக் கணத்துக்கண் 'நின்ற
சொன்மு னியல் பாகும்' (எழு - 144) என்றதனாற் கொள்க.
 

எல்லாமொழியும்          என்றதனால்           வினைச்சொல்லும்
வினைக்குறிப்புச்சொல்லும்  இயல்பாய்  முடிதல்  கொள்க. கிடந்தது குதிரை
கரிதுகுதிரை என வரும்.
 

சொல்லிய     என்றதனான்     இருபெயரொட்டுப்    பண்புத்தொகை
வன்கணத்துக்கண்   இனவொற்றுமிக்கு   வல்லெழுத்துப்பெற்று   முடிதலும்
இயல்புகணத்துக்கண்    இனவொற்று    மிக்கு     முடிதலுங்    கொள்க.
கரட்டுக்காணம்   குருட்டுக்கோழி    திருட்டுப்புலையன்    களிற்றுப்பன்றி
வெளிற்றுப்பனை  எயிற்றுப்பல்  எனவும், வரட்டாடு குருட்டெருது எனவும்
வரும்.
 

பண்பினென்றதனால்  மெல்லொற்று    வல்லொற்றாய்   ஐகாரம்பெற்று
முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று
முடிவனவும், மெல்லொற்று