குற்றியலுகரப்புணரியல்325

வல்லொற்றாகாது  ஐகாரமும்  வல்லெழுத்தும் பெற்று முடிவனவுங் கொள்க.
ஒர்யாட்டையானை    ஐயாட்டையெருது     எனவும்,    அற்றைக்கூத்தர்
இற்றைக்கூத்தர் எனவும், மன்றைத்தூதை மன்றைப்பானை பண்டைச்சான்றார்
எனவும் வரும். 
 

(20)
 

426.

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே.
 

இஃது  அவ்வாறு  ஈற்றுள்  ஒன்றற்கு  எய்தியது  விலக்கிப் பிறிதுவிதி
வகுத்தது.
 

இதன் பொருள் : வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகும் -
வல்லொற்றுத்  தொடர்மொழிக்  குற்றுகர  ஈறு   வல்லெழுத்து   வருவழி
வல்லெழுத்து மிகும் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : கொக்குக்கடிது  பாக்குக்கடிது  பட்டுக்கடிது  சிறிது   தீது
பெரிது என வரும். 
 

(21)
 

427.

சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
யாவினா முதலிய மென்றொடர் மொழியு
மாயிய றிரியா வல்லெழுத் தியற்கை.

 

இதுவும்  அவ்  ஆறு   ஈற்றுள்   ஒன்றன்கண்   ஏழாம்   வேற்றுமை
இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : சுட்டுச்சினை    நீடிய   மென்றொடர்   மொழியும்
சுட்டாகிய  சினையெழுத்து  நீண்டமென்றொடர்க்  குற்றுகர ஈறும், யாவினா
முதலிய   மென்றொடர்  மொழியும்  -  யாவென்னும்     வினாமுதலாகிய
மென்றொடர்மொழிக் குற்றுகர ஈறும், வல்லெழுத் தியற்கை ஆஇயல் திரியா
- வல்லெழுத்துப்பெற்று   முடியுந்  தன்மையாகிய  அவ்வியல்பிற் றிரியாது
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஆங்குக்கொண்டான்               ஈங்குக்கொண்டான்
ஊங்குக்கொண்டான்  யாங்குக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான்
என வரும்.