326குற்றியலுகரப்புணரியல்

இயற்கை    யென்றதனான்   மென்றொடர்மொழிக்குற்றியலுகர   ஈற்று
வினையெச்சம்   இயல்பாயும்,    வன்றொடர்மொழிக்குற்றியலுகர    ஈற்று
வினையெச்சம்    மிக்கும்    முடிவன   கொள்க.    இருந்துகொண்டான்
ஆண்டுசென்றான்    தந்துதீர்ந்தான்    வந்து   போயினான்    எனவும்,
செத்துக்கிடந்தான் செற்றுச்செய்தான் உய்த்துக்கொண்டான் நட்டுப்போனான்
எனவும் வரும். 
 

(22)
 

428.

யாவினா மொழியே யியல்பு மாகும்.
 

இது மேலனவற்றுள்  ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
வல்லெழுத்து விலக்கி இயல்பாமென்றலின்.
 

இதன் பொருள் : யாவினா  மொழியே  இயல்பு  மாகும் - அவற்றுள்
யாவென்னும்  வினாவையுடைய  சொல்   முற்கூறியவாறன்றி   இயல்பாயும்
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : யாங்குகொண்டான் சென்றான் தந்தான் போயினான் என
வரும்.   இஃது   எப்படி   யென்னும்   வினாப்பொருளை  உணர்த்திற்று.
உம்மையான் மிக்கு முடிதலே வலியுடைத்து. ஏகாரம் பிரிநிலை. 
 

(23)
 

429.

அந்நான் மொழியுந் தந்நிலை திரியா.
 

இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.
 

இதன் பொருள் : அந்நான்   மொழியும்   -   சுட்டுமுதன்  மூன்றும்
யாமுதன்  மொழியுமாகிய  அந் நான்கு மொழியும், தம்நிலை திரியா - தம்
மெல்லொற்றாய, தன்மை திரிந்து வல்லொற்றாகாது முடியும் என்றவாறு.
 

உதாரணம் : முற்காட்டியவே தந்நிலை  யென்றதனான் மெல்லொற்றுத்
திரியாது வல்லெழுத்து மிக்குமுடிவன பிறவுங் கொள்க. அங்குக்கொண்டான்
இங்குக்கொண்டான்   உங்குக்கொண்டான்  எங்குக்கொண்டான்  சென்றான்
தந்தான் போயினான் என வரும்.