328குற்றியலுகரப்புணரியல்

ஈண்டு  உணர்த்திற்று.  இனி  உண்டுகாணம் உண்டுசாக்காடு உண்டுதாமரை
உண்டுஞானம்   நூல்   மணி   யாழ்   வட்டு   அடை   ஆடை   என
வருவனவெல்லாங்  கேடுந்  திரிபுமின்றி  வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை
பண்பாயும் நின்றன.  இவற்றின்  வேறுபாடு  வினையியலுள் வினைக்குறிப்பு
ஓதும் வழி உணர்க.
 

உள்பொருளென்பது பண்புத்தொகை முடிபன்றோவெனின், அஃது ஓசை
ஒற்றுமைபடச்  சொல்லும்  வழியது  போலும். இஃது ஓசை இடையறவுபடச்
சொல்லும் வழியதென்க. 
 

(25)
 

431.

இருதிசை புணரி னேயிடை வருமே.
 

இது குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : இருதிசை   புணரின்  -  இரண்டு  பெருந்திசையுந்
தம்மிற்  புணரின்,  ஏஇடை வரும் - ஏயென்னுஞ்  சாரியை  இடை நின்று
புணரும் என்றவாறு.
 

உதாரணம் : தெற்கேவடக்கு கிழக்கேமேற்கு இவை உம்மைத் தொகை.
 

(26)
 

432.

திரிபுவேறு கிளப்பி னொற்று முகரமுங்
கெடுதல் வேண்டு மென்மனார் புலவ
ரொற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான.

 

இது  பெருந்திசைகளோடு   கோணத்திசைகள்  புணர்த்தலின்  எய்தாத
தெய்துவித்தது.
 

இதன் பொருள் : திரிபுவேறு  கிளப்பின் - அப்பெருந்  திசைகளோடு
கோணத்திசைகளை  வேறாகப் புணர்க்குமிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல்
வேண்டும் என்மனார் புலவர் - அவ்வுகரம்  ஏறிநின்ற  ஒற்றும்  அவ்வீற்று
உகரமுங் கெட்டு முடிதல்  வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு
புணருங்காலை - அது தெற்கென்னுந்  திசையொடு  புணருங்காலத்து, ஆன
ஒற்று மெய் திரிந்து னகாரமாகும் - அத்