திசைக்குப் பொருந்திநின்ற றகார ஒற்றுத் தன்வடிவுதிரிந்து னகர ஒற்றாய் நிற்கும் என்றவாறு. |
திரிந்தென்றதனான் வடக்கென்பதன்கண் நின்ற ககர ஒற்றுக் கெடுத்து முடித்துக் கொள்க. |
உதாரணம் : வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு என வரும். |
வேறென்றதனால் திசைப்பெயரோடு பொருட்பெயர்வரினும் இம்முடிபு கொள்க. வடகடல் வடசுரம் வடவேங்கடம் தென்குமரி தென்சுரம் தென்னிலங்கை என வரும். |
மெய்யென்றதனான் உயிர் கெட்டுந் திரிந்தும் மெய் கெட்டும் முடிவனவும் உள, திசைப்பெயர் முன்னர்ப் பொருட்பெயர் வந்துழியென்று உணர்க. கிழக்கு என்பது கரை கூரை என்பவற்றோடு புணருமிடத்துக் கீழ்கரை கீழ்கூரை என நிலைமொழியிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல்நின்ற ககர ஒற்றும் ழகரத்தில் அகரமுங் கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்கு, கரை கூரை, மீகரை மீகூரை என நிலைமொழி ஈற்று உகரம் மெய்யொடுங்கெட்டு அதன்மேல் நின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனானே மேன்மாடு மேல்பால் மேலைச்சேரி என்றாற்போல் வனவுஞ் செய்கையறிந்து முடிக்க. |
(27) |
433. | ஒன்றுமுத லாக வெட்ட னிறுதி யெல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே முற்ற வின்வரூஉ மிரண்டலங் கடையே. |
|
நிறுத்தமுறையானே ஆறு ஈற்றுக் குற்றுகரமும் புணருமாறு உணர்த்தி இனி அவ் வீற்று எண்ணுப்பெயர் முடிக்கின்றார் ; இஃது அவற்றுட் பத்தென்னும் எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயர்வந்து புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஒன்றுமுதலாக எட்டன் இறுதி எல்லா எண்ணும் - ஒன்றென்னும் எண்முதலாக எட்டென்னும் |