330குற்றியலுகரப்புணரியல்

எண்ணீறாயுள்ள   எல்லா  எண்ணுப்பெயர்களும்,  பத்தன்   முன்வரின் -
பத்தென்னும்  எண்ணுப் பெயரின் முன்வரின், குற்றிய லுகரம் மெய்யொடுங்
கெடும் -  அப்  பத்தென்னுஞ் சொல்லிற்  குற்றயிலுகரந்  தான்  ஏறிநின்ற
மெய்யோடுங்  கெடும்,  இரண்டலங்  கடை முற்ற  இன்வரூஉம் - ஆண்டு
இரண்டல்லாத  எண்ணுப்பெயர்களிடத்து  முடிய  இன்சாரியை இடைவந்து
புணரும் என்றவாறு.
 

உதாரணம் : பதினொன்று   பதின்மூன்று   பதினான்கு   பதினைந்து
பதினாறு பதினேழு பதினெட்டு என வரும்.
 

நிலைமொழி  முற்கூறாததனாற்  பிறவெண்ணின்  முன்னர்ப்  பிறபெயர்
வந்துழியும்  இன்பெறுதல்  கொள்க.  ஒன்பதின்கூறு  ஒன்பதின்பால்  என
வரும்.  முற்ற  வென்றதனாற்  பதினான்கென்புழி  வந்த  இன்னின் னகரம்
வருமொழிக்கட் கருவி செய்து கெடுத்து முடிக்க. 
 

(28)
 

434.

பத்த னொற்றுக்கெட னகார மிரட்ட
லொத்த தென்ப விரண்டுவரு காலை.

 

இது  மேல்   இன்பெறாதென்று  விலக்கிய   இரண்டற்குப்  பிறிதுவிதி
கூறுகின்றது.
 

இதன் பொருள் : பத்தன்     ஒற்றுக்கெட   னகாரம்   இரட்டல்  -
பத்தென்னுஞ்  சொல்லின் நின்ற தகர ஒற்றுக் கெட னகர ஒற்று இரட்டித்து
வருதல்,  இரண்டு  வருகாலை    ஒத்ததென்ப   -   இரண்டென்னுமெண்
வருங்காலத்திற் பொருந்திற்றென்பர் ஆசிரியர் என்றவாறு.
 

உதாரணம் : பன்னிரண்டு என வரும்.
 

'குற்றயி லுகர மெய்யொடுங்  கெடும்' (எழு - 433) என்ற விதி இதற்கும்
மேலனவற்றிற்குங் கொள்க. 
 

(29)
 

435.

ஆயிரம் வரினு மாயிய றிரியாது.
 

இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர்வரின் வரும் முடிபு கூறுகின்றது.