குற்றியலுகரப்புணரியல்331

இதன் பொருள் : ஆயிரம்  வரினும்  ஆயியல் திரியாது - முற்கூறிய
பத்தன்  முன்னர்  ஒன்று   முதலியனவேயன்றி   ஆயிர   மென்னுமெண்
வந்தாலும் ஈறுகெட்டு இன்பெற்று முடியும் இயல்பில் திரியாது என்றவாறு.
 

உதாரணம் : பதினாயிரம் என வரும்.
 

உம்மை இறந்தது தழீஇயிற்று. 
 

(30)
 

436.

நிறையு மளவும் வரூஉங் காலையுங்
குறையா தாகு மின்னென் சாரியை.

 

இஃது    எண்ணுப்பெயரோடு    நிறைப்பெயரும்    அளவுப்பெயரும்
புணர்கின்ற புணர்ச்சி கூறுகின்றது.
 

இதன் பொருள் : நிறையும் அளவும்  வரூஉங் காலையும் - முற்கூறிய
பத்தென்பதன் முன்னர் நிறைப்பெயரும்  அளவுப்பெயரும் வருங்காலத்தும்,
இன்னென்  சாரியை  குறையாதாகும்  -  அவ்  வின்னென்னுஞ்  சாரியை
குறையாது வந்து முடியும் என்றவாறு.
 

உதாரணம் : பதின்கழஞ்சு  தொடி  பலம்  எனவும்,  பதின்கலம் சாடி
தூதை பானை  நாழி  மண்டை  வட்டி  எனவும்,  பதிற்றகல் பதிற்றுழக்கு
எனவும் வரும்.
 

குறையாதாகு   மென்றதனாற்    பொருட்பெயரும்   எண்ணுப்பெயரும்
நிறைப்பெயரும்  வந்துழியும்  இன்  கொடுத்து  வேண்டுஞ்செய்கை செய்து
முடிக்க.  பதிற்றுவேலி  யாண்டு  அடுக்கு  முழம்  எனவும்,  பதின்றிங்கள்
எனவும்,  பதிற்றுத்தொடி  எனவும்   வரும்.  பதிற்றொன்று  என்பதுபோல
இரண்டுமுதற் பத்தளவும் ஒட்டுக.
 

இவ் வீற்றின் னகரம்  றகரமாதல் 1'அளவாகு மொழி முதல்' (எழு - 121)
என்பதனுள் 'நிலைஇய' என்றதனால் 


1. அளவாகும்  என்பது  அளவுப்பெயருக்கே   கூறிய  விதியாதலினால்
நிறைப்பெயர்   முதலியவற்றிற்கு     'நிலைஇய'    என்ற    இலேசினாற்
கொள்ளப்பட்டது. பதிற்று என்பதில் இற்று சாரியை யென்பர் நன்னூலார்.