332குற்றியலுகரப்புணரியல்

முடிக்க.   இவற்றிற்கு  ஒற்றிரட்டுதலும்  உகரம்  வருதலும் வல்லெழுத்துப்
பெறுதலும் 'ஒன்று  முதலாக' (எழு - 433) என்பதனுள் 'முற்ற' என்றதனாற்
கொள்க. 
 

(31)
 

437.

ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர்
நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம்
வந்திடை நிலையு மியற்கைத் தென்ப
கூறிய வியற்கை குற்றிய லுகர
மாற னிறுதி யல்வழி யான.

 

இஃது எண்ணுப்  பெயரோடு பத்தென்னும்  எண்ணுப் பெயர்க்கு முடிபு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் - ஒன்றுமுதல்
ஒன்பது ஈறாகக்  கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், நின்ற பத்தன்
ஒற்றுக்கெட - வருமொழியாக  வந்துநின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகர
ஒற்றுக்கெட,  ஆய்தம்   வந்து   இடைநிலையும்   இயற்கைத்   தென்ப -
ஆய்தமானது வந்து இடையே நிலைபெறும் இயல்பையுடைத்தென்று கூறுவர்
ஆசிரியர்,  ஆறன்  இறுதி   அல்வழி  யான -  அவற்றுள்  ஆறென்னும்
ஈறல்லாதவிடத்து, குற்றிய லுகரம் கூறிய இயற்கை - குற்றியலுகரம் முற்கூறிய
இயற்கையாய் மெய்யொடுங் கெட்டுமுடியும் என்றவாறு.
 

இங்ஙனம் வருமாறு மேற் சூத்திரங்களுட் காட்டுதும்.
 

வந்தென்றதனால்  ஆய்தமாகத்  திரியாது  தகர  ஒற்றுக்கெட்டு ஒருபது
என்று நிற்றலுங் கொள்க. 
 

(32)
 

438.

முதலீ ரெண்ணினொற்று ரகர மாகு
முகரம் வருத லாவயி னான.

 

இது   மேற்கூறியவற்றிற்    சிலவற்றிற்கு    நிலைமொழிச்    செய்கை
கூறுகின்றது.