திரிபிலவாகச்செய்தல் - மூலபாடம் முதலாகிய மூன்றும் ஒன்றோடொன்று மாறுபடாமற் செய்தல். விபரீதப் பொருளின்றி யெனினுமாம். நாடின் எனவும் பாடம். அதற்கேற்பவும் பொருள் உரைத்துக்கொள்க. பொழிப்புரைத்தல் இருவகைப்படும். ஒன்று பிண்டமாகக் கூறல்; ஒன்று மூலபாடம் கூறியும் அதற்குப் பதப் பொருள் உரைத்தும் அதனை உதாரணத்தால் விளக்கியுஞ் செய்தல். அவற்றுட் பின்னையதே இச் சூத்திரத்தாற் கூறிய இலக்கணம். சிவஞானபோதத்துக் குரைக்கப்பட்ட பொழிப்புரையும் பின்னையதே. அதனை அச் சூத்திர உரையானறிக. |
அகலம் :- |
"தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய வகல மென்மனார் புலவர்." |
|
இதன் கருத்து:-தன்னூலிடத்தும் பிறநூலிடத்துமுள்ள பொருள் விகற்பங்களை ஆக்கேபஞ் செய்து அதனாற் புறத்தே தோன்றும்படி அவ் விகற்பத்தைத் தெரித்துக் காட்டுவது அகல வுரையென்ப ராசிரிய ரென்பது. |
நுட்பம் :- |
"ஏதுவி னாங்கவை துடைத்தல் நுட்பம்." |
|
இதன் கருத்து:- அங்ஙன மாக்கேபித்துத் தெரித்த விகற்பப் பொருளுட்பொருந்தாத பொருளைக் காரணங் காட்டி மறுத்து நீக்கி விடுவது நுட்பவுரை என்பது. |
எச்சம் :- |
"துடைத்துக் கொள்பொரு ளெச்ச மாகும்." |
|
இதன் கருத்து:- அங்ஙனம் மறுத்து இதுதான் பொருத்த மென்று கொள்ளப்பட்ட பொரு ளெச்சமாகும் என்பது. |
புகழ்ந்தமதி - கல்வி தொடங்குதற்கு நல்லதென்று புகழப்பட்ட மாதம். |
ஓரை - இலக்கினம். |
கொள்வோர் - மாணாக்கர். கற்பிக்கப்படுவோர் - கற்பிக்கப்படத் தகுந்த மாணாக்கர். |
இவர் தன்மை :- |
நன்னிறம் : எவ்வகைப்பட்ட நிறங்களுந் தன்னிடத்திலே கலத்தற்குரியது. அதுபோல, நன் மாணாக்கனும் ஆசிரியர் கூறும் எவ்வகைப்பட்ட வுரைகளையுந் தன் கருத்தில் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவனா யிருப்பன் என்றபடி. 'பல்லுரையுங் கேட்பான்' என்று பின்னுங் கூறுதல் காண்க. |
பன்னாடைப்புறமென்றது : பன்னாடையின் மேற்புறத்தை. குஞ்சரம் - யானை. யானை தன்னினத்தோடு கூடி அவற்றிற் கிடையூறு வாராமற் காப்பதுபோல, நன்மாணக்கனும் தன்னொடு உடன் |