குற்றியலுகரப்புணரியல்333

இதன் பொருள் : முதலீ   ரெண்ணி   னொற்று   ரகரம்   ஆகும் -
அவற்றின்   முதற்கண்நின்ற   இரண்டெண்ணினுடைய   னகர    ஒற்றும்
ணகரஒற்றும்  ரகரஒற்றாகத்  திரிந்துநிற்கும், ஆவயினான உகரம் வருதல் -
அவ்விடத்து உகரம் வருக என்றவாறு.
 

உதாரணம் : ஒருபஃது  என வரும்.  ஒன்றென்பதன் ஈற்றுக் குற்றுகரம்
மெய்யொடுங்  கெடுத்து  னகர  ஒற்றினை  ரகர  ஒற்றாக்கி   உகரமேற்றி
ஒருவென   நிறுத்தி   நின்ற   பத்தென்பதன்  தகர   ஒற்றுக்   கெடுத்து
ஆய்தமாக்கிப்   பஃதென    வருவித்து    ஒருபஃது    என    முடிக்க.
மேல்வருவனவற்றிற்குஞ்      சூத்திரங்களாற்      கூறுஞ்     சிறப்புவிதி
ஒழிந்தவற்றிற்கு இதுவே முடிபாகக் கொள்க. 
 

(33)
 

439.

இடைநிலை ரகர மிரண்டெ னெண்ணிற்கு
நடைமருங் கின்றே பொருள்வயி னான.

 

இதுவும் அது.
 

இதன் பொருள் : இரண்டெ   னெண்ணிற்கு   இடைநிலை  ரகரம் -
இரண்டென்னு  மெண்ணிற்கு  இடைநின்ற  ரகரம்,  பொருள்வயி  னான -
அம்மொழி  பொருள்பெறும்   இடத்து,  நடைமருங்  கின்று  -  நடக்கும்
இடமின்றிக்கெடும் என்றவாறு.
 

உதாரணம் : இருபஃது  என வரும். இதற்கு  ரகரவுயிர் மெய் இதனாற்
கெடுத்து ஏனைய கூறியவாறே கூட்டி முடிக்க.
 

பொருளெனவே எண்ணல்லாப் பெயருங் கொள்க. இரு கடல் இருவினை
இருபிறப்பு என வரும். 
 

(34)
 

440.

மூன்று மாறு நெடுமுதல் குறுகும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் - மூன்றென்னு
மெண்ணும் ஆறென்னு மெண்ணும் நெடுமுதல் குறுகி முடியும் என்றவாறு.
 

அறு எனக் குறுக்கிப் பஃது என வருவித்த அறுபஃது என முடிக்க.
 

(35)