334குற்றியலுகரப்புணரியல்

441.

மூன்ற னொற்றே பகார மாகும்
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : மூன்றன்  ஒற்றே  பகார  மாகும் -  மூன்றென்னும்
எண்ணின்கண் நின்ற னகர ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : முப்பஃது என வரும். 
 

(36)
 

442.

நான்க னொற்றே றகார மாகும்.
 

இதுவும் அது,
 

இதன் பொருள் : நான்கன்  ஒற்றே   றகாரமாகும்  -  நான்கென்னும்
எண்ணின்கண் நின்ற னகர ஒற்று றகர ஒற்றாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நாற்பஃது என வரும். 
 

(37)
 

443.

ஐந்த னொற்றே மகார மாகும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஐந்தனொற்றே    மகாரமாகும்    -    ஐந்தென்னு
மெண்ணின்கண் நின்ற நகர ஒற்று மகர ஒற்றாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஐம்பஃது என வரும்.
 

ஏழு குற்றியலுகர ஈறன்மை உருபியலுட் காண்க. 
 

(38)
 

444.

எட்ட னொற்றே ணகார மாகும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : எட்டனொற்றே    ணகாரமாகும்   -   எட்டென்னு
மெண்ணின்கண் நின்ற டகர ஒற்று ணகர ஒற்றாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : எண்பஃது என வரும்.
 

(39)