அது முன்னர்க் காட்டினாம். ஆறு 'நெடுமுதல் குறுகும்' (எழு - 440) என்ற மாட்டேற்றானே ஆறு நெடுமுதல் குறுகி நின்றது. |
உதாரணம் ; அறுகலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், அறுகழஞ்சு தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன மேற்காட்டினாம். ஏழு குற்றுகர ஈறன்மையின் மாட்டேறு ஏலாதாயிற்று. |
(44) |
450. | நமவ வென்னு மூன்றொடு சிவணி யகரம் வரினு மெட்டன்மு னியல்பே. |
|
இது வேண்டாது கூறி 1வேண்டியது முடிக்கின்றது, 'ஞநம யவ' (எழு - 144) என்னுஞ் சூத்திரத்துட் கூறியவற்றைக் கூறுதலின். |
இதன் பொருள் : எட்டன்முன் - எட்டென்பதன் முன்னர், நமவ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் - அளவுப்பெயர்களின் முன்னர் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய நமவ என்னும் மூன்றனோடு பொருந்தி உயிர்க்கணத்து அகரம் வரினும், உம்மையான் உயிர்க்கணத்து உகரம் வரினுங் கூறாத வல்லெழுத்துக்கள் வரினும், இயல்பு - முற்கூறியவாறே டகாரம் ணகாரமாய் வேறோர் விகாரமின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. |
நமவவென்னும் மூன்றும் வந்தாற்போல அகரம்வரினுமென்பது பொருள். |
உதாரணம் : எண்ணாழி மண்டை வட்டி எனவும், எண்ணகல் எண்ணுழக்கு எனவும், எண்கலம் சாடி தூதை பானை எனவும் வரும். |
ஒன்றென முடித்தலான் வன்கணத்து நிறைப்பெயருங் கொள்க. எண்கழஞ்சு தொடி பலம் என வரும். |
இவ் வேண்டா கூறலான் எண்ணகலெனக் குற்றுகர ஈறாய்க் கேடுந் திரிவும் பெற்று உயிர்வருமொழியான தொடர் மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. |
| (45) |
|
1. வேண்டியது உயிர்முதன் மொழிவருதற்கண் ஒற்றிரட்டுதல். |