451. | ஐந்து மூன்று நமவரு காலை வந்த தொக்கு மொற்றிய னிலையே. |
|
இதுவும் மேல்மாட்டேற்றோடு ஒவ்வாமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஐந்தும் மூன்றும் நமவரு காலை - ஐந்தென்னு மெண்ணும் மூன்றென்னு மெண்ணும் நகர முதன்மொழியும் மகர முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஒற்றியல் நிலை - நிலைமொழிக்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமை கூறின், வந்தது ஒக்கும் - மேற்கூறியவாறே மகரமும் பகரமுமாகாது வருமொழி முதல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஐந்நாழி ஐம்மண்டை முந்நாழி மும்மண்டை என வரும். |
மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிக் கூற்றினால் நானாழி நான்மண்டை என்புழி நிலைமொழி னகரம் றகரமாகாது நின்றவாறே நின்று முடிதலும் வருமொழி முதனின்ற நகரம் னகரமாகத் திரிய நிலைமொழி நகரங் கெடுதலுங் கொள்க. |
(46) |
452. | மூன்ற னொற்றே வகரம் வருவழித் தோன்றிய வகரத் துருவா கும்மே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : மூன்றனொற்று - மூன்றாமெண்ணின்கணின்ற னகர ஒற்று, வகரம் வருவழி - வகரமுதன்மொழி வருமிடத்து, தோன்றிய வகரத்து உருவாகும் - அவ் வருமொழியாய்த் தோன்றிய வகரத்தின் வடிவாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : முவ்வட்டி என வரும். |
தோன்றிய என்றதனானே முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். |
(47) |
453. | நான்க னொற்றே லகார மாகும். |
| |
இதுவும் அது. |