340குற்றியலுகரப்புணரியல்

இதன் பொருள் : நான்கனொற்று - நான்காமெண்ணின்கணின்ற  னகர
ஒற்று, லகார மாகும் - வகரமுதன்மொழி  வந்தால்  லகர ஒற்றாகத் திரிந்து
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நால்வட்டி என வரும். 
 

(48)
 

454.

ஐந்த னொற்றே முந்தையது கெடுமே.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஐந்த  னொற்று -  ஐந்தாமெண்ணின்கணின்ற  நகர
ஒற்று,  முந்தையது கெடும் - வகரமுதன்மொழி  வந்தால் முன்னின்ற வடிவு
கெட்டு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஐவட்டி என வரும்.
 

முந்தையென்றதனால்  நகர  ஒற்றுக்  கெடாது  வகர ஒற்றாகத் திரிந்து
ஐவ்வட்டியெனச் சிறுபான்மை வரும். 
 

(49)
 

455.

முதலீ ரெண்ணின்மு னுயிர்வரு காலைத்
தவலென மொழிப வுகரக் கிளவி
முதனிலை நீட லாவயி னான.

 

இது  1மாட்டேற்றான்  எய்திய   உகரத்திற்குக்  கேடுகூறி   முதனீள்க
என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் : முதலீ  ரெண்ணின்  முன்  உயிர் வருகாலை - ஒரு
இரு  என  முடிந்துநின்ற  இரண்டெண்ணின்  முன்னர் உயிர் முதன்மொழி
வருமொழியாய்  வருங்காலத்து,   உகரக்   கிளவி  தவலென  மொழிப  -
நிலைமொழி  யுகரமாகிய  எழுத்துக்  கெடுதலாமென்று சொல்லுவர் புலவர்,
ஆவயினான  முதனிலை  நீடல்  -   அவ்    விரண்டெண்ணின்கணின்ற
முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஓரகல் ஈரகல் ஓருழக்கு ஈருழக்கு என வரும். 
 

(50)

1. இங்கே  மாட்டேறு   என்றது   'அளந்தறிகிளவியும்'   என்ற  41-ம்
சூத்திரத்துக் கூறிய மாட்டேற்றை.