342குற்றியலுகரப்புணரியல்

மூழக்கு   மூழாக்கென்னும்  மருமுடிபு   இவ்வோத்தின்  புறனடையான்
முடிக்க.
 

(52)
 

458.

ஆறென் கிளவி முதனீ டும்மே.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஆறென்  கிளவி  -  ஆறென்னு  மெண்ணுப்பெயர்
அகல்  உழக்கு  என்பன  வரின், முதல்  நீடும் -  முன்னர்க்  குறுகிநின்ற
முதலெழுத்து நீண்டு முடியும் என்றவாறு.
 

அறுவென்னாது ஆறென்றார், திரிந்ததன் றிரிபது என்னும் நயத்தால்.
 

உதாரணம் : ஆறகல் ஆறுழக்கு என வரும். 
 

(53)
 

459.

ஒன்பா னிறுதி யுருவுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே.

 

இது  குற்றுகரம்  மெய்யொடுங்  கெடாதுநின்று  இன்பெறுக  என்றலின்
எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
 

இதன் பொருள் : ஒன்பான்  இறுதி  உருவுநிலை திரியாது - அளவும்
நிறையும்  வருவழி ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகரந் தன்வடிவு
நிலைதிரியாது  நின்று,  சாரியைமொழி  இன்பெறல் வேண்டும் - சாரியைச்
சொல்லாகிய இன்பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
 

உதாரணம் : ஒன்பதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி
அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும்.
 

சாரியைமொழி  யென்றதனான்  இன்னோடு  உகரமும்  வல்லெழுத்துங்
கொடுத்துச்  செய்கைசெய்து    முடிக்க.   ஒன்பதிற்றுக்கலம்   சாடி   என
எல்லாவற்றோடும் ஒட்டுக.
 

உருபென்பதனான்  ஒன்பதிற்றென   1ஒற்றிரட்டுதல்   எல்லாவற்றிற்குங்
கொள்க.


1. ஒற்றிரட்டுதல் என்றது இன்னி னகரவொற்று றகரமாய் இரட்டுதலை.