இன்னும் இதனானே ஒன்பதினாழியென்புழி வந்த இன்னின் னகரக் கேடுங் கொள்க. 'அளவாகு மொழிமுதல்' (எழு - 121) என்பதனானும் 'நிலைஇய' என்னும் இலேசானும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. |
(54) |
460. | நூறுமுன் வரினுங் கூறிய வியல்பே. |
|
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்பதனைப் புணர்க்கின்றது. |
இதன் பொருள் : முன் - ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர், நூறுவரினும் - நூறென்னு மெண்ணுப்பெயர் வந்தாலும், கூறிய இயல்பு - மேற் பத்தென்பதனோடு புணரும் வழிக் கூறிய இயல்பு எய்தி முடியும் என்றவாறு. |
அது குற்றுகரம் மெய்யொடுங்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி முதலீரெண்ணி னொற்று ரகரமாய் உகரம் பெற்று இடைநிலை ரகரம் இரண்டன்கட் கெட்டு முடிதலாம். |
உதாரணம் : ஒருநூறு இருநூறு அறுநூறு எண்ணூறு என வரும் இவை மாட்டேற்றான் முடிந்தன. 1மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப. |
(55) |
461. | மூன்ற னொற்றே நகார மாகும். |
|
இது மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : மூன்ற னொற்றே நகார மாகும் - மூன்றாமெண்ணின்கணின்ற னகரவொற்று நகரவொற்றாகும் என்றவாறு. |
உதாரணம் : முந்நூறு என வரும். |
(56) |
462. | நான்கு மைந்து மொற்றுமெய் திரியா. |
|
இதுவும் அது. |
|
1. மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப என்றது, மாட்டேற்றினாற் பெற்ற முன்னை விதிகளுக்குப் பொருந்தாது வருவனவற்றிற்கு இனி விதி சொல்லப்படும் என்பதை. |