இதனை ஒன்பதென்னும் ஒகரத்தின் முன்னர் வந்த தகர ஒற்றின்மேலே ஒகரத்தையேற்றிப் பகரங்கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்துநின்ற னகர ஒற்றினை இரண்டு ளகர ஒற்றாக்கி நூறென்பதன் நகரங்கெடுத்து ஊகாரம் ஆகாரமாக்கி ளகரத்தின் மேலேற்றி இகரமும் ரகரமும் வருவித்து விகாரப்பட்ட உயிராகிய ஆகாரத்தின்முன் உடம்படு மெய் யகாரம் வருவித்து றகர உகரங் கெடுத்து மகர ஒற்று வருவித்து முடிக்க. |
(58) |
464. | ஆயிரக் கிளவி வரூஉங் காலை முதலீ ரெண்ணி னுகரங் கெடுமே. |
|
இஃது அவ் வொன்றுமுதல் ஒன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஆயிரக் கிளவி வரூஉங் காலை - ஆயிரமென்னுஞ்சொல் ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன்வருங்காலத்து, முதல் ஈரெண்ணின் உகரம் கெடும் - ஒரு இரு என்னும் இரண் டெண்ணின்கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும் என்றவாறு. |
உகரங் கெடுமெனவே ஏனையன முன்னர்க் கூறியவாறே நிற்றல் பெற்றாம். |
உதாரணம் : ஒராயிரம் இராயிரம் என வரும். |
(59) |
465. | முதனிலை நீடினு மான மில்லை. |
|
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : முதனிலை நீடினும் மான மில்லை - அம் முதலீரெண்ணின் முதற்கணின்ற ஒகார இகாரங்கள் நீண்டு முடியினுங் குற்றமில்லை என்றவாறு. |
உதாரணம் : ஓராயிரம் ஈராயிரம் என வரும். |
(60) |
466. | மூன்ற னொற்றே வகார மாகும். |
|
இது மூன்றென்னுமெண் ஆயிரத்தோடு புணருமாறு கூறுகின்றது. |