இதன் பொருள் : மூன்ற னொற்றே வகார மாகும் - மூன்றென்னு மெண்ணின்கணின்ற னகர ஒற்று வகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : முவ்வாயிரம் என வரும். |
முன்னிற் சூத்திரத்து நிலை என்றதனான் இதனை முதனிலை நீட்டி வகர ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் என முடிக்க. |
(61) |
467. | நான்க னொற்றே லகார மாகும். |
|
இது நான்கென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : நான்க னொற்றே லகார மாகும் - நான்கென்று மெண்ணின்கணின்ற னகர ஒற்று லகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : நாலாயிரம் என வரும். |
(62) |
468. | ஐந்த னொற்றே யகார மாகும். |
|
இஃது ஐந்தென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஐந்த னொற்றே யகார மாகும் - ஐந்தென்னு மெண்ணின்கணின்ற நகர ஒற்று யகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. |
ஐயாயிரம் என வரும். |
(63) |
469. | ஆறன் மருங்கிற் குற்றிய லுகர மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும். |
|
இஃது ஆறென்னு மெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் - ஆறென்னு மெண்ணின்கணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிற்றலின், மெய் ஒழிய ஈறு |