கெடுதல் வேண்டும் - அது தானேறிய மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது நிற்ப முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
உதாரணம் : அறாயிரம் என வரும். |
முன்னர் 'நெடுமுதல் குறுகும்' (எழு - 440) என்றவழி அறுவென நின்ற முற்றுகரத்திற்கே ஈண்டுக் கேடு கூறினாரென்பது பெற்றாம், என்னை? குற்றியலுகரமாயின் ஏறிமுடிதலின். இது குற்றுகரந் திரிந்து முற்றுகரமாய் நிற்றலின் ஈண்டு முடிபு கூறினார். முற்றியலுகரம் ஈறு மெய்யொழியக்கெடுமெனவே குற்றுகரங் கெடாது ஏறிமுடியுமென்பது அருத்தாபத்தியாற் பெறுதும். 1ஆறாயிரம் என வரும். |
மருங்கென்றதனாற் பிறபொருட் பெயர்க்கண்ணும் நெடுமுதல் குறுகாது நின்று முடிதல் கொள்க. ஆறாகுவதே என வரும். |
(64) |
470. | ஒன்பா னிறுதி யுருவுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. |
|
இஃது ஒன்பதென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஒன்பான் இறுதி - ஒன்ப தென்னு மெண்ணின் இறுதிக் குற்றுகரம், உருவுநிலை திரியாது - தன்வடிவுநிலை திரிந்து கெடாது, சாரியை மரபு இன்பெறல் வேண்டும் - சாரியையாகிய மரபினையுடைய இன் பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
உதாரணம் : ஒன்பதினாயிரம் என வரும். |
உருவென்றும் நிலையென்றுஞ் சாரியை மரபென்றுங் கூறிய மிகையால் ஆயிரமல்லாத பிறவெண்ணின்கண்ணும் பொருட் பெயரிடத்தும் இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று |
|
1. ஆறாயிரம் என்புழி ஆறு குற்றியலுகரம் ; அருத்தாபத்தி விதியால் வருமொழியாகிய ஆயிரம் ஏறி முடிந்தது. |