348குற்றியலுகரப்புணரியல்

முடியும்   முடிபு    கொள்க.    ஒன்பதிற்றுக்கோடி    ஒன்பதிற்றொன்பது
ஒன்பதிற்றுத்தடக்கை ஒன்பதிற்றெழுத்து என வரும்.
 

இன்னும்  இவ்விலேசானே  வேறொரு  முடிபின்மையிற் 1கூறாதொழிந்த
எண்ணாயிர   மென்றவழி   ஒற்றிரட்டுதலும்   ஈண்டுக்    கூறியவற்றிற்கு
ஒற்றிரட்டுதலுங்  கொள்க.   'அளவாகு   மொழிமுதல்'   (எழு   -   121)
என்பதனுள் 'நிலைஇய' என்றதனான் 2னகரம் றகரமாதல் கொள்க.
 

(65)
 

471.

நூறா யிரமுன் வரூஉங் காலை
நூற னியற்கை முதனிலைக் கிளவி.

 

இஃது  ஒன்றுமுதல்  ஒன்பான்களோடு  நூறென்னுமெண்  அடையடுத்த
ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : நூறாயிரம்     முன்     வரூஉங்    காலை    -
நூறாயிரமென்னும்  அடையடுத்தமொழி  ஒன்றுமுதல்   ஒன்பான்கள்  முன்
வருமொழியாய்  வருங்காலத்து,  முதனிலைக்  கிளவி  நூறன்  இயற்கை -
ஒன்றென்னும்  முதனிலைக்  கிளவி  ஒன்று  முன் நூறென்னுமெண்ணோடு
முடிந்தாற்போல  விகாரமெய்தி  முடியும்.  எனவே வழிநிலைக்கிளவியாகிய
இரண்டுமுதலிய  எண்கள்  விகாரமெய்தியும்  எய்தாது இயல்பாயும் முடியும்
என்றவாறு.
 

உதாரணம் : ஒருநூறாயிரம்  என  வரும்.  ஏனையன  இருநூறாயிரம்
இரண்டு நூறாயிரம், முந்நூறாயிரம் மூன்று நூறாயிரம், நானூறாயிரம் நான்கு
நூறாயிரம்,   ஐந்நூறாயிரம்   ஐந்து   நூறாயிரம்,  அறுநூறாயிரம்   ஆறு
நூறாயிரம்,  எண்ணூறாயிரம்  எட்டு  நூறாயிரம்,  ஒன்பது  நூறாயிரம் என
வரும்.  இவ் விகாரப்பட்டனவற்றிற்குக் குற்றுகரம்  மெய்யொடுங்  கெடுத்து
முதலீரெண்ணினொற்று  ரகரமாக்கி   உகரம்வருவித்து   மூன்றும்  ஆறும்
நெடுமுதல்  குறுக்கி  மூன்றனொற்று  நகார மாக்கி நான்கும் ஐந்தும் ஒற்று
மெய்திரியாவாக்கி எட்டனொற்று ணகாரமாக்கி 


1. கூறாத எண்ணாயிரம் என்றது, எட்டோடு ஆயிரம் புணருங்கால்
ணகரமிரட்டுதற்கு விதி சூத்திரத்தாற் கூறாமையை.
 

2.னகரம் றகரமாதல் என்றது ஒன்பதிற்றுக்கோடி முதலியவற்றில் னகரம்
றகரமாதலை.