இலேசுகளாற்கொண்ட செய்கைளில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க. |
ஏற்புழிக்கோட லென்பதனாற் 1தொள்ளாயிரமென்ற முடிபினோடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க. முன்னென்பதனான் இன்சாரியை பெற்று ஒன்பதினூறாயிரம் என்றுமாம். நிலையென்றதனான் மூன்றும் ஆறும் இயல்பாக முடிவுழி நெடுமுதல் குறுகாமை கொள்க. |
(66) |
472. | நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற் கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே. |
|
இது நூறென்பதனோடு ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. |
இதன் பொருள் : நூறு என் கிளவி - நூறென்னுமெண்ணுப்பெயர், ஒன்று முதல் ஒன்பாற்கு - ஒன்றுமுதல் ஒன்பான்களோடு புணருமிடத்து, ஈறு சினையொழிய - ஈறாகிய குற்றுகரந் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடுங் கெடாது நிற்ப, இன ஒற்று மிகும் - அச்சினைக்கு இனமாகிய றகர ஒற்று மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : நூற்றொன்று என வரும். இரண்டு முதல் ஒன்பது அளவுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. |
2ஈறுசினை என்று ஓதிய மிகையான் நூறென்பதனோடு பிற எண்ணும் பிறபொருட்பெயரும் இவ்விதியும் பிறவிதியும் எய்தி முடிதல் கொள்க. நூற்றுப்பத்து நூற்றுக்கோடி நூற்றுத்தொண்ணூறு எனவும், நூற்றுக்குறை நூற்றிதழ்த்தாமரை நூற்றுக்காணம் நூற்றுக்கான்மண்டபம் எனவும் இன ஒற்று மிக்கனகொள்க. இன்னும் இதனானே இருநூற்றொன்று |
|
1. நூறனியற்கை என்று மாட்டியதால் ஒன்பதனோடு நூறு புணருங்கால் தொள்ளாயிரம் என வந்தாற்போல ஒன்பதன்முன் நூறாயிரம் வருங்காலும் தொள்ளாயிர ஆயிரம் எனத்திரிந்து முடியுமென்பது பட்டதேனும் அங்ஙனம் முடியாதென்பது கருத்து. |
2. ஈறு என்பதே அமையவும் சினையென்றது மிகையென்க. |