இரண்டு நூற்றொன்று என நூறு அடையடுத்தவழியுங் கொள்க. |
(67) |
473. | அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும். |
|
இஃது அந்நூறென்பதனோடு ஒன்றுமுதல் ஒன்பான்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : அவை ஊர்பத்தினும் - அந்நூறென்பது நின்று முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களை ஊர்ந்து வந்த பத்தென்பதனோடு புணருமிடத்தும், அத்தொழிற்றாகும் - ஈறு சினையொழிய இன ஒற்று மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : நூற்றொருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எழுபஃது எண்பஃது என வரும். மற்று நூற்றொன்பது அவை ஊரப்பட்டு வந்தது அன்மை உணர்க. |
ஆகுமென்றதனான் ஒருநூற்றொருபஃது இருநூற்றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்க. |
(68) |
474. | அளவு நிறையு மாயிய றிரியாது குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையு முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். |
|
இது நூறென்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : அளவும் நிறையும் ஆயியல் திரியாது - நூறென்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்பிற் றிரியாது இன ஒற்று மிக்குமுடியும், குற்றியலுகரமும் வல்லெழுத்தியற்கையும் - அவ்விடத்துக் குற்றியலுகரங் கெடாமையும் இன ஒற்று மிக்கு வன்றொடர்மொழியாய் நிற்றலின் வருமொழி வல்லெழுத்து மிகும் இயல்பும், முற்கிளந்தன்ன என்மனார் புலவர் - 'வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே' |