(எழு - 426) என வன்றொடர்மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : நூற்றுக்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். |
திரியாதென்றதனால் நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் என வரும். |
(69) |
475. | ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி யொன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும். |
|
இஃது ஒன்றுமுதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும் ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. |
இதன் பொருள் : ஒன்று முதலாகிய பத்து ஊர்கிளவி - ஒன்றுமுதல் எட்டு ஈறாகப் பத்தென்னும் எண் ஏறி ஒரு சொல்லாகி நின்ற ஒருபஃது முதலிய எண்கள், ஒன்றுமுதல் ஒன்பாற்கு - ஒன்றுமுதல் ஒன்பான்கள் வருமொழியாய் வந்து புணரும்இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும் - பஃதென்பதன்கண் நின்ற ஆய்தங்கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன், ஒற்று இடைமிகும் - ஆண்டு இன ஒற்றாகிய ஒரு தகர ஒற்று இடைமிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஒருபத்தொன்று இருபத்தொன்று ஒருபத்திரண்டு இருபத்திரண்டு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள் 1ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால் நின்ற நூறென்பதனோடு அடுத்து வருமென்று உணர்க. |
(70) |
|
1. ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால்நின்ற நூறென்பதனோடு அடுத்துவருமென்றது, நூற்றொருபத்தொன்று, நூற்றொருபத்திரண்டு என நூறோடு அடுத்துவருதலை. அதிகாரமென்றது 67 - ம் சூத்திரம் முதலாக நூறு அதிகாரப்பட்டு வருதலை. |