476. | ஆயிரம் வரினே யின்னென் சாரியை யாவயி னொற்றிடை மிகுத லில்லை. |
|
இஃது ஒருபஃது முதலியவற்றோடு ஆயிரத்தைப் புணர்க்கின்றது. |
இதன் பொருள் : ஆயிரம் வரின் இன்னென் சாரியை - அவ் வொன்று முதலாகிய பத்து ஊர் கிளவி ஆயிரத்தோடு புணரும் இடத்து இன்சாரியை பெறும், ஆவயின் ஒற்று இடைமிகுதல் இல்லை - அவ்விடத்துத் தகர ஒற்று இடை வந்து மிகாது என்றவாறு. |
உதாரணம் : ஒருபதினாயிரம் இருபதினாயிரம் என எண்பதின்காறும் ஒட்டுக. இவை நூற்றொருபதினாயிரம் எனவும் வரும். |
ஆவயின் என்றதனால் நூறாயிரத்தொருபத்தீராயிரம் என்றாற்போல அத்துப் பெறுதலும் பிறவுங் கொள்க. |
(71) |
477. | அளவு நிறையு மாயிய றிரியா. |
|
இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்க்கின்றது. |
இதன் பொருள் : அளவும் நிறையும் ஆயியல் திரியா - ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஒருபதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், ஒருபதின்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். இவற்றிற்கு நூறு அடையடுத்து ஒட்டுக. |
திரியா என்றதனான் ஒருபதிற்றுக்கலம் இருபதிற்றுக் கலம் என்னும் தொடக்கத்தனவற்றிற்கண் இன்னின் அகரம் றகரமாகத் திரிந்து இரட்டுதலும் உகரமும் வல்லெழுத்தும் பெறுதலுங் கொள்க. இன்னும் இதனானே ஒருபதினாழி என்ற |