354குற்றியலுகரப்புணரியல்

நூல் மணி  யாழ்  வட்டு என ஒட்டுக. இதற்கு  நெடுமுதல் குறுக்கி 'மூன்ற
னொற்றே வந்த  தொக்கும்' (எழு - 447) என்பதனான்  முடிக்க.  முன்னர்
எண்ணுப்  பெயரும் அளவுப்  பெயரும் நிறைப் பெயரும் வருவழிக் கூறிய
விகாரங்களிற்   பொருட்பெயர்க்கும்   ஏற்பன    கொணர்ந்து    முடித்து
எல்லாவற்றிற்கும்  நிலையென்றதனான்  1ஒற்றுத்  திரிந்து  முடிக்க. அவை
மூன்றற்கும் ஐந்தற்கும் ஞகரம் வருவழி ஞகர ஒற்றாதலும் மூன்றற்கு யகரம்
வருவழி  வகர  ஒற்றாதலுமாம்.  நாற்கல்  நான்குகல்  சுனை  துடி  பறை,
நான்ஞாண்  நான்குஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஐங்கல் ஐந்துகல் சுனை
துடி  பறை, ஐஞ்ஞாண்  ஐந்துஞாண் நூல் மணி, ஐயாழ் ஐந்துயாழ் ஐவட்டு
ஐந்துவட்டு ; அறுகல்  ஆறுகல்  சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ்
வட்டு ; எண்கல்  எட்டுக்கல் சுனை  துடி பறை, எண்  ஞாண் எட்டுஞாண்
நூல் மணி யாழ் வட்டு ;  ஒன்பதுகல் சுனை துடி  பறை ஞாண் நூல் மணி
யாழ்  வட்டு   என   ஒட்டுக.   ஒன்பதின்கல்    எனச்   சென்றதேனும்
வழக்கின்மையின் ஒழிக்க. இன்னும் மாட்டேறின்றி வருவனவற்றிற் கெல்லாம்
முடிபு 'நிலை' யென்றதனான் முடிக்க.
 

(73)
 

479.

அதனிலை யுயிர்க்கும் யாவரு காலை
முதனிலை யொகர மோவா கும்மே
ரகரத் துகரந் துவரக் கெடுமே.

 

இஃது   ஒன்றுமுதல்   ஒன்பான்களோடு   பொருட்பெயருள்    உயிர்
முதன்மொழி   முடியுமாறும்  மேற்கூறிய  யகாரம்  வேறுபட  முடியுமாறுங்
கூறுகின்றது.
 

இதன் பொருள் : முதனிலைக்கு - ஒன்றென்னும் எண்ணின் திரிபாகிய
ஒரு  என்னும்  எண்ணிற்கு,  உயிரும்  யாவும்  வருகாலை -  உயிர்முதன்
மொழியும்  யாமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, அதன் நிலை
- அம்  முதனிலையின்  தன்மை  இவ்வாறாம்,  ஒகரம்  ஓவாகும் - ஒகரம்
ஓகாரமாய் 


1. ஒற்று என்றது மூன்று  ஐந்து  என்பவற்றின் னகர நகர ஒற்றுக்களை.
ஏனையவற்றிக்கு ஒற்றுத் திரிதற்கு முன் விதி சொல்லப்பட்டது.