நீளும், ரகரத்து உகரந் துவரக் கெடும் - ரகரத்து மேனின்ற உகரம் முற்றக் கெட்டு முடியும் என்றவாறு. |
நான்காவதனை முதனிலையோடு கூட்டி அதன்கண் நின்ற உம்மையை உயிரோடும் யாவோடுங் கூட்டுக. எனவே வழிநிலை யெண்கள் உயிர் முதன்மொழி வந்த இடத்து முற்கூறியவாறே இருவாற்றானும் முடியும். |
உதாரணம் : ஓரடை ஓராகம் ஓரிலை ஓரீட்டம் ஓருலை ஓரூசல் ஓரெழு ஓரேடு ஓரையம், ஓரொழுங்கு ஓரோலை ஓரௌவியம் என வரும். குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலெண்ணினொற்று ரகரமாக்குக. ஓர் யாழ் ஓர் யானை என வரும். துவர என்றதனான் இரண்டென்னும் எண்ணின் இகரத்தை நீட்டி ரகரத்துள் உகரத்தைக் கெடுத்து ஈரசை ஈர்யானை எனவும், மூன்றென்னும் எண்ணின் னகர வொற்றுக் கெடுத்து மூவசை மூயானை எனவும் முடிக்க. இவை செய்யுண் முடிபு. இன்னும் இதனானே இங்ஙனம் வருவன பிறவும் அறிந்து முடித்துக்கொள்க. |
(74) |
480. | இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளவொடு நிகரலு முரித்தே. |
|
இஃது இரண்டுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மாவென்பது புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : இரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டென்னுமெண் முதலாக ஒன்பதென்னுமென் ஈறாக நின்ற எண்ணுப்பெயர்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவிதோன்றின் - வழக்கின்கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்கு உரிய மா வென்னுஞ்சொல் வருமொழியாய் வரின், மகர அளவொடு நிகரலும் உரித்து - அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டையென்னும் அளவுப் பெயரோடு ஒத்து விகாரப்பட்டு முடிதலும் |