358குற்றியலுகரப்புணரியல்

இன்னுஞ்  சான்றோர்  செய்யுட்கட்  பிறசாரியை   பெற்று  விகாரங்கள்
எய்தி முடிவனவற்றிற்கெல்லாம் இச் சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க.1
 

(76)
 

482.

உயிரும் புள்ளிய மிறுதி யாகிக்
குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி
நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியு
முயர்திணை யஃறிணை யாயிரு மருங்கி
னைம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ்
செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின்
மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும்
தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூஉ
மெண்ணின் றொகுதி யுளப்படப் பிறவு
மன்னவை யெல்லா மருவின் பாத்திய
புணரிய னிலையிடை யுணரத் தோன்றா.

 

இஃது  இவ்  வதிகாரத்தாற்   புணர்க்கப்படாத  சொற்கள்  இவையென
அவற்றை எடுத்து உணர்த்துகின்றது.
 

இதன் பொருள் : உயிரும்  புள்ளியும்  இறுதி   யாகி  -  கூறுங்கால்
உயிரும்  புள்ளியும்  ஈறாக  நிற்பதோர் சொல்லாகி, குறிப்பினும் பண்பினும்
இசையினுந்  தோன்றி  -  குறிப்பினானும்   பண்பினானும்  இசையினானும்
பிறந்து,  நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் - ஒருவழிப்பட வாராத
சொற்றன்மை   குறைந்த  சொற்களாகிய   உரிச்சொற்களும்,   உயர்திணை
அஃறிணை ஆயிரு மருங்கின் - உயர்திணை அஃ 


1. குற்றியலுகர  விடைச்சொல்லாகிய  ஞான்று  என்பது,  'அவாவென்ப
வெல்லா   வுயிர்க்குமெஞ்   ஞான்றுந்  தவா'  எனவும்,  'இல்  வாழ்க்கை
வழியெஞ்ச  லெஞ்ஞான்று மில்லை' எனவும் வரும். இதற்கு என்றும் எனக்
கொள்க.  'ஒழுகு  நீராரல்  பார்க்குங்  குருகுமுண்டு  தாமணந்த ஞான்றே'
என்பது, தாமணந்த வன்றே எனக் கொள்க. இது காலத்தின்கண் வரும். இப்
பகுதி சில பிரதிகளிற் காணப்படுகின்றது.