றிணை யென்னும் அவ் விரண்டிடத்தும் உளவாகிய, ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் - ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்துபாலினையும் அறிதற்குக் காரணமாகிய 1பண்புகொள் பெயர் தொகுந் தொகைச் சொல்லும், செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின் - செய்யுஞ் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய, மெய் ஒருங்கு இயலுந் தொழில் தொகுமொழியும் - காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒருசொற்கண்ணே சேரநடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு நிற்குஞ் சொற்களும், தம்இயல் கிளப்பின் - தமது தன்மை கூறுமிடத்து, தம்முன் தாம்வரூஉம் எண்ணின் றொகுதி உளப்பட - நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப் பெயரினது தொகுதியும் உளப்பட, அன்ன பிறவும் எல்லாம் - அத் தன்மையாகிய பிறவு மெல்லாம், மருவின் பாத்திய - உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கணமாகவுடைய, புணரியல் நிலை இடை யுணரத் தோன்றா - ஒன்றனோடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றா என்றவாறு. |