இனிப் பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப்படாது பப்பத்தெனவும் பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன்றென்பதும் அது. அதுதானே ஓரொன் றோரொன்றாகக் கொடு என்றாற் புணர்க்கப்படும். |
இனி அன்னபிறவும் என்றதனானே உண்டானென்புழி உண்ணென்னும் முதனிலையுங் காலங்காட்டும் டகரமும் இடனும் பாலும் உணர்த்தும் ஆனும் ஒன்றனோடொன்று புணர்க்கப்படா, அவை நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அன்மையின். கரியனென்புழிக் கருவென நிறுத்தி அன்னெனத் தந்து புணர்க்கப்படா, அது இன்னனென்னும் பொருடருதலின். ஏனை வினைச் சொற்களும் இவ்வாறே பிரித்துப் புணர்க்கலாகாமை உணர்க. இன்னும் அதனானே கொள்ளெனக்கொண்டான் என்புழிக் கொள்ளென்பதனை என என்பதனோடு புணர்க்கப்படாமையும் ஊரன் வெற்பன் முதலிய வினைப் பெயர்களும் பிறவும் புணர்க்கப்படாமையுங் கொள்க. இவ்வாசிரியர் புணர்க்கப்படாத இச் சொற்களையும் வடநூற்கண் முடித்த அனகன் அனபாயன் அகளங்கன் முதலிய வடசொற்களையும் பின்னுள்ளோர் முடித்தல் முதனூலோடு மாறுகொளக் கூறலாமென்று உணர்க. |
(77) |
483. | கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணர்ந்தன ரொழுக்க னன்மதி நாட்டத் தென்மனார் புலவர். |
|
இஃது இவ் வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றை யெல்லாம் இதனானே முடிக்க என அதிகாரப் புறனடை கூறுகின்றது. |
இதன் பொருள் : கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் - முன்னர் எடுத்தோதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்-நால்வகை வழக்கும் நடக்குமிடத்து மருவுத |