லோடு திரிந்து முடிவனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் - முன்னர்க் கூறிய இலக்கண முறைமையினின்றும் வேறுபடத் தோன்றுமாயின் அவற்றை, நன்மதி நாட்டத்து - நல்ல அறிவினது ஆராய்ச்சியாலே, வழங்கியன் மருங்கின் - வழக்கு முடிந்து நடக்குமிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனார் புலவர் - முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : 'தடவுத்திரை' என உகரமும் வல்லெழுத்தும் பெற்றுந் 'தடவுநிலை' (புறம் - 140) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வந்தது. அதவத்தங்கனி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப்பெற்றது. 1'கசதபத் தோன்றின்' என அகர ஈற்றின் முன்னர்த் தகரங்கொடுக்க. |
2'நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன் குரவ நீடிய கொன்றையங் கானல்' |
|
என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டுழி இருவழியும் அம்முப்பெற்றன. |
'முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ' |
(மலைபடு - 176) |
என அவ்வீறு அல்வழிக்கண் அம்முப்பெறாத முடிவு பெற்றன. 'திண்வார் விசித்த முழவொ டாகுளி' (மலைபடு - 3) 'சுறவெறிமீன்' 'இரவழங்கு சிறுநெறி' (அகம் - 318) இவை உகரம் பெறாமல் வந்தன. 'கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை' (அகம் - 97) என இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப்பெற்றன. 'தீயி னன்ன வொண்செங் காந்தள்' (மலைபடு - 145) என ஈகார ஈறு வேற்றுமைக்கண் இன்பெற்றது. 'நல்லொழுக்கங் காக்குந் திருவத்தவர்' (நாலடி - 57) என உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. 'ஏப்பெற்றமான் பிணைபோல' (சிந்தா - 2965) என ஏகார ஈறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது வந்தது. 'கைத்துண்டாம் |
|
1. கசதப - அகரவீறு. |
2. நறா - ஆகாரவீறு; முளா, பிணா, இரா, ஆகாரவீறு. |