குற்றியலுகரப்புணரியல்363

போழ்தே'  (நாலடி - 19)  'கைத்தில்லார்  நல்லவர்'  எனவும், 'புன்னையங்
கானல்'  (அகம் - 80)  'முல்லையந்  தொடையல்'  எனவும்   ஐகார  ஈறு
வேற்றுமைக்கண்  அத்தும்  அம்மும்   பெற்றன.   'அண்ணன்   கோயில்
வண்ணமே'  (சிந்தா - நாமகள் - 126) என ஓகார ஈறு யகர உடம்படுமெய்
பெற்றது.
 

இனி 1'அஞ்செவி  நிறைய வாலின' (முல்லைப் - 89) என அவ்வழிக்கட்
ககரமும் அகரமுங் கெட்டன. 'மரவம் பாவை வயிறாரப் பருகி' 'மரவ நாகம்
வணங்கி  மாற்கணம்'  என  இரு  வழியும்  மகரம் விகாரப்பட்டு அம்முப்
பெற்றன.  'காரெதிர்  கானம்  பாடினே  மாக' 'பொன்னந் திகிரி முன்சமத்
துருட்டி' 'பொன்னங் குவட்டிற் பொலி வெய்தி' என னகர ஈறு இருவழியும்
அம்முப் பெற்றன. 'வேர்பிணி வெதிரத்துக் கால் பொரு நாலிசை' என ரகர
ஈறு  வேற்றமைக்கண்  அத்துப் பெற்றது. 'நாவலந்  தண்பொழில்' 'கானலம்
பெருந்துறை' என லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப்பெற்றன. 'நெய்தலஞ்
சிறுபறை'  இஃது  அல்வழிக்கண்  அம்முப்பெற்றது.   'ஆயிடை  யிருபே
ராண்மை  செய்தபூசல்'  (குறுந்  -  43)   என்புழி,   ஆயிடை  யென்பது
உருபாதலின் 'நீடவருதல்' (எழு - 218)  என்பதனான் முடியாது நீண்டு வகர
ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முனை  எனத் தெவ்வென்புழி வகரங்கெட்டு
மகர  ஒற்றுப்  பெற்று  முடிந்தது. அ என்னுஞ் சுட்டு 'அன்றி யனைத்தும்'
எனத் திரிந்தது.  'முதிர்  கோங்கின்  முகை'  (குறிஞ்சிக்கலி - 20) எனவுங்
'காய்மாண்ட  தெங்கின்  பழம்'  (சிந்தா  -  31)  எனவுங்  குற்றுகர  ஈறு
இன்பெறுதலுங் கொள்க. 2'தொண்டு  தலையிட்ட பத்துக்குறை' என ணகரம்
இரட்டாது தகர ஒற்று டகர ஒற்றாய்க் குற்றியலுகரம் ஏறி முடிந்தது.


1. அகஞ்செவி  அஞ்செவியெனக்  ககர   உயிர்  மெய்கெட்டு  நின்றது
என்றபடி.
 

2. ஒன்பது  தலையிட்ட  -  தொண்டு   தலையிட்ட   எனத்  திரிந்து
புணர்ந்ததென்பது  நச்சினார்க்கினியர்  கருத்து.  ஒன்பதோடு  தகரம் நிறீஇ
னகரத்தை  ணகரமாக்கித்  தொண்பது  என  வைத்துப் பது என்பதிற் பகர
அகரங் கெடுத்துத் தகர உகரத்திலுள்ள தகரத்தை  டகரமாக்கி உகரமேற்றித்
தொண்டு  என  முடிக்க. தொண்டு  என்பது  ஒன்பது  என்றாயிற்றென்பர்
சிலர்.