364குற்றியலுகரப்புணரியல்

இங்ஙனஞ் செய்யுளுட் பிறவுந்  திரிவன  உளவேனும் இப்புறனடையான்
முடிக்க.  அருமருந்தானென்பது   ரகரவுகரங்   கெட்டு   அருமந்தானென
முடிந்தது. சோழனாடு சோணாடு என  அன்கெட்டு முடிந்தது. பாண்டிநாடும்
அது. தொண்டைமா  நாடு தொண்டை நாடென ஈற்றெழுத்துச்  சில கெட்டு
முடிந்தது.  மலையமானாடு  மலாடு என  முதலெழுத் தொழிந்தன  பலவுங்
கெட்டு முடிந்தது. பொதுவிலென்பது பொதியிலென உகரந் திரிந்து இகரமாய்
யகர  உடம்படுமெய்  பெற்று  முடிந்தது. பிறவும் இவ்வாறே திரிந்து மருவி
வழங்குவன எல்லாம் இப் புறனடையான் அமைத்துக் கொள்க.
 

(78)
 

குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று.
 

எழுத்ததிகாரம் முற்றிற்று.
 

நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு
மேலைப் புணர்ச்சி தொகைமரபு-பாலா
முருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கந்
தெரிவரிய குற்றுகரஞ் செப்பு.

 

எழுத்ததி காரத்துச் சூத்திரங்க ளெல்லா
மொழுக்கிய வொன்பதோத் துள்ளும்-வழுக்கின்றி
நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கண்
மேனூற்று வைத்தார் விரித்து.