1எட்டு வகைய வென்பார் கூறுமாறு:-எழுத்து இனைத் தென்றலும், இன்ன பெயரின வென்றலும், இன்ன முறையின வென்றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பின வென்றலும், இன்ன புணர்ச்சியினவென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மையின வென்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும். |