26நூன்மரபு

டும்   உடம்பு   பதினெட்டுஞ்  சார்பிற்றோற்றம்  மூன்றும்  அதன் வகை.
அளபெடை  யேழும்  உயிர்மெய்  யிருநூற்றொருபத்தாறும்  அவற்றோடுங்
கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி.
 

இனி  எழுத்துக்களது  பெயரும் முறையுந்  தொகையும் இச்சூத்திரத்தாற்
பெற்றாம்.   வகை   'ஒளகார   விறுவாய்'   (எழு - 8)   என்பதனானும்,
'னகாரவிறுவாய்'  (எழு - 9)  என்பதனானும்,  'அவைதாங்,  குற்றியலிகரங்
குற்றியலுகரம்'  (எழு - 2)  என்பதனானும் பெற்றாம். விரி 'குன்றிசைமொழி
வயின்'  (எழு  -  41)   என்பதனானும்,   'புள்ளியில்லா'   (எழு  -  17)
என்பதனானும் பெற்றாம்.
 

அளவு 'அவற்றுள்,  அ  இ உ' (எழு - 3)  என்பதனானும், 'ஆ ஈ ஊ'
(எழு - 4)  என்பதனானும்,  'மெய்யினளவே'  (எழு - 11)  என்பதனானும்,
'அவ்விய னிலையும்' (எழு - 12) என்பதனானும் பெற்றாம்.
 

பிறப்பு பிறப்பியலுட் பெற்றாம்.
 

புணர்ச்சி 'உயிரிறு  சொன்முன்'  (எழு - 107) என்பதனானும், 'அவற்று,
ணிறுத்தசொல்லின்' (எழு - 108) என்பதனானும், பிறவாற்றானும் பெற்றாம்.
 

இனி 1எட்டிறந்த பல்வகைய வென்பார் கூறுமாறு:-  எழுத்தூக்களது
குறைவுங்,  கூட்டமும்,  பிரிவும்,  மயக்கமும்,  மொழியாக்கமும், நிலையும்,
இனமும்,    ஒன்று    பலவாதலுந்,    திரிந்ததன்றிரிபு   அதுவென்றலும்,
பிறிதென்றலும்,     அதுவும்    பிறிதுமென்றலும்,    நிலையிற்றென்றலும்,
நிலையாதென்றலும்,  நிலையிற்றும்நிலையாது  மென்றலும்   இன்னோரன்ன
பலவுமாம்.
 

குறைவு 'அரையளவு  குறுகல்'  (எழு - 13)  'ஓரளபாகும்'  (எழு - 58)
என்பனவற்றாற் பெற்றாம்.
 

கூட்டம் 'மெய்யோ  டியையினும்' (எழு - 10) 'புள்ளியில்லா' (எழு - 17)
என்பனவற்றாற் பெற்றாம்.
 

பிரிவு 'மெய்யுயிர்நீங்கின்' (எழு - 139) என்பதனாற் பெற்றாம்.


1. எட்டிறந்த  பல  வகையாவன  எனவும்  பாடம். அப் பாடமே நலம்.
என்னை?  முன்   எட்டிறந்த  பலவகையானும்  என  நச்சினார்க்கினியரே
வகுத்துக் கூறியிருத்தலின்.