பாராட்டிச்  சென்னை  அரசாட்சியார்  'ராவ் பகதூர்'  எனும்  பட்டத்தை யளித்துப் பெருமைப் படுத்தினர்.    | 
'அகநானூறு' எனும் பனுவலை ஆராய்ந்து வந்தார்கள்.  ஆனால் தமிழ் மக்கள்  இழைத்த தவக்குறையால் 1901 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 - ந் தேதி தமிழன்னை தலைகுனிய இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடி நீழலிற் குளிர்ந்தனர். இவரை நீத்த  கையாற்றுமிகையான்  தமிழ்ப்  புலவர் பலர் இரங்கற் பாக்களாற் தந்துயர் வெப்பத்தை ஒருவாறு ஆற்றுவாராயினர். அவற்றுள் இரு செய்யுளை மாத்திரம் இங்கே குறிப்பிடுகின்றாம்.    | 
மகாமகோபாத்தியாய      தக்ஷிணாத்திய      கலாநிதி      டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூறியது :    | 
"தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பித் தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பி-னல்காத தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை யாமோ தரமியம்ப வே."    | 
பிள்ளையவர்களை  நன்கறிந்தவரும்  சிறந்த  ஆராய்ச்சி வல்லுநருமாய திரு.வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் கூறியது :    | 
"காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்."  | 
-----------   |