34நூன்மரபு

கட்குத் திரிபு  கூறுங்கால் 'அல்வழி யெல்லா முறழென மொழிப' எனக்கூறி
லகரம்   றகரமாகுமெனக்  கூறிய  ஆசிரியர்  மீளவும் அவற்றிற்குத் திரிபு
கூறுங்கால், 'தகரம் வரும்வழி யாய்தம் நிலையலும்' என்னுஞ் சூத்திரத்தால்
லகரம் ஆய்தமாகத்  திரியுமென்று திரிந்த மொழியீற்றையே [லகரத்தையே]
எடுத்துக்  கூறலுமதுவாம். இனி  'லனவென   வரூஉம்  புள்ளி  முன்னர்த்
தனவென   வரிற்   றனவா   கும்மே'   என்பதனால்  தகரம்  றகரமாகத்
திரியுமென்று   கூறிய  ஆசிரியர்,  மீள  லகரத்திற்குத்  திரிபு  கூறுங்கால்
றகரமெனத்  திரிபெழுத்து மொழியை எடுத்துக் கூறாமல் 'தகரம் வரும்வழி'
எனத்   திரிந்த  எழுத்து  மொழியை  யெடுத்துக்  கூறலும்  அதுவேயாம்.
நன்னூலுரையுள்   மயிலைநாதர்  'திரிந்ததன்  றிரிபு மதுவுமா மொரோவழி'
என்று   கூறலின்  இத்  திரிந்ததன்  றிரிபு அதுவென்றன் முதலியன முன்
யாதோ ஒரு நூலிலே சூத்திரங்களா யிருந்தனபோலும்.
 

திரிந்ததன்  றிரிபு  பிறிதென்றலாவது:-  ஓரீறு  பிறிதோரீறாகத் திரிந்து
அவ்வாறே [பிறிதீறாகவே]  நின்று புணருமென்றல். அது மரமென்பதனோடு
அடியென்னும்  வருமொழி  புணருங்கால்  மகரங்கெட்டு   அகரவீறாகவே
(பிறிதீறாகவே)  நின்று  புணருதல்  போல்வது.  இங்ஙனமே 'னகரவீறு' ம்,
றகரமாகத் திரிந்து பிறிதீறாகவே நின்று புணர்தல் காண்க.
 

திரிந்ததன்    திரிபு   அதுவும்   பிறிதுமென்றலாவது  :  -    ஓரீறு
வேறோரெழுத்துப்  பெற்றுப்  பிறிதெழுத்தீறாக  நின்று புணருமெனக் கூறி,
அத்திரிபீற்றிற்காயினும்  அத்திரிபீற்றோடு   புணரும்  வருமொழிக்காயினும்
மீளவும்  ஒன்று  விதிக்கவேண்டி, அத்திரிபீற்றை எடுத்துப் புணர்க்குங்கால்,
அத்திரிபீறு  திரிந்த  ஈற்றோடுங் (இயல்பீற்றோடும்) கூடிநிற்றலின், அதுவும்
(இயல்பீறும்)  பிறிதும்  (விதியீறும்)  ஆயே  நின்று  புணருமென்றல். அது,
ஆறனுருபோடும்  நான்கனுருபோடும்  புணருங்கால் நெடுமுதல் குறுகிநின்ற
தம், நம், எம், தன், நின், என் என்னும்  மொழிகளின் ஈற்றிலுள்ள மெய்கள்
ஓரகரம் பெற்றுப் புணருமென, "ஆற னுருபினு  நான்க னுருபினுங் - கூறிய
குற்றொற்றிரட்ட லில்லை - யீறாகு புள்ளி யகரமொடு நிலையு - நெடுமுதல்
குறுகு மொழிமுன் னான" என்னுஞ்  சூத்திரத்தால் விதித்த ஆசிரியர், மீள
அவ்வகரம்   பெற்ற  தம்  முதலிய மொழிகளோடு அது உருபை வைத்துப்
புணர்த்துங்கால்,  அம்மொழிகளை  மகரம்  முதலிய புள்ளியீறும் (அதுவும்)
அகரவீறும் (பிறிதும்)  ஆகிய  இரண்டீறுமாயே,  "ஆறனுருபி னகரக்கிளவி
யீறாககர  முனைக்கெடுதல்  வேண்டும்"  என்னுஞ் சூத்திரத்துள், ஈறாககரம்
என  வைத்துப்  புணர்த்தல்  காண்க.  ஈறாககரம்  -  புள்ளியீற்றுக்களுக்கு
ஈறாகிய  அகரம்  என்பது  பொருள்.  தம்  முதலிய என்னாது தாமுதலிய
புள்ளியீற்றகரமென்று  புள்ளியீறு  கூறினமையினானே  அதுவும், அவற்றின்
ஈறாகிய  அகரம்  என்றதனானே  பிறிதுந்  தோன்றக்  கூறினமை காண்க.
இன்னும்  'வெரிநெ  னிறுதி  முழுதுங் கெடுவழி  -  வருமிட  னுடைத்தே
மல்லெழுத் தியற்கை' என்னுஞ் சூத்திரத்து 'வெரிநு' என்று சொல்ல