பரம்பரையாற் கருவியாவன. நூன்மரபு பிறப்பியல்களிற் கூறும் இலக்கணங்களும் சொற்குக் கருவியாகுமுகத்தால் செய்கைக்குக் கருவியாதலின் பரம்பரையாற் கருவியாயின. |
அகக்கருவியாவது - செய்கைப்படுதற்குரிய நிலைமொழி யீற்றெழுத்துப்பற்றிவரும் விதிகளைக் கூறுவது. அஃது "எகர வொகரம் பெயர்க்கீ றாகா" என்றார் போல்வது. இது செய்கைக்குரிய ஈற்றெழுத்துப்பற்றிய விதியாதலின் அகக்கருவியாயிற்று. |
"அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி - யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே - யவைதாங் - க ச த ப வென்றா ந ம வ வென்றா - வகர அகரமோ டவையென மொழிப" என்பதும் அகக் கருவியாகும்; செய்கைக்கு அண்ணிய கருவியாதலின், முதனிலை இறுதிநிலைகளும் அகக்கருவியாகும்; மொழிக்கு முதனிற்கும் எழுத்துக்களும் ஈற்றினிற்கு மெழுத்துக்களுஞ் செய்கைக் குபகாரப்படுதலின். |
அகப்புறக்கருவியாவது - புணர்ச்சி இலக்கணமும், புணர்ச்சிக்குரிய திரிபுகள் இவையென்பதும், இயல்பும், புணர்ச்சிவகையும், நிலைமொழிகள் செய்கைவிதியிற் பெறுஞ் சாரியைகள் வருமொழியொடு புணருங்கா லடையுந் திரிபுகளுமாகி இருமொழிகளும் செய்கைப்படுதற் கேற்றவாய்வரும் விதிகளைக் கூறுவது. |
புறக்கருவியாவது - செய்கைக்குரிய நிலைமொழி வருமொழிகளாய் நிற்குமொழிகளின் மரபு கூறுவது. அது மொழிமரபு. அது செய்கைக்குரிய கருவிவிதிகூறாது செய்கைப்படுதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின் புறக்கருவியாயிற்று. |
புறப்புறக்கருவியாவது-மொழிகளாதற்குரிய எழுத்துக்களது இலக்கணமும் பிறப்புங் கூறுவது. அது நூன்மரபும் பிறப்பியலுமாம். அவை செய்கைக்குரிய புறக்கருவியாகிய மொழிகளாதற்குரிய எழுத்துக்களின் இலக்கணமும் பிறப்புங் கூறுதலின் புறப்புறக் கருவியாயின. இங்ஙனமே நால்வகைக் கருவியின் இலக்கணமுமறிந்துகொள்க. |
எழுத்துக்கள் மொழியாகி நின்று பின் செய்கை அடைதலின் அவற்றி னிலக்கணங்களைச் செய்கைக்குப் புறப்புறக்கருவியென்றும், அம்மொழிகளே, நிலைமொழி வருமொழியாக நின்று செய்கை பெறுதலின் மொழிகளினிலக்கணங்களைப் புறக்கருவியென்றும், அங்ஙனம் மொழிகள் புணருங்கால் நிலைமொழியீறும் வருமொழி முதலுமடைகின்ற திரிபிலக்கணங்களையும் இயல்பையும், நிலைமொழி பெறுஞ் சாரியைகள் இவை என்பதையும், அவற்றின் திரிபு முதலியவற்றையும் கூறுதலின் புணரியலை அகப்புறக்கருவியென்றும், நிலைமொழியீற்றில் நிற்றற்குரிய எழுத்து விதி முதலியவைகளைக் கூறும் விதிகளை அகக்கருவியென்றும் வகுத்தனர் என்க. இவற்றுள் எழுத்துக்களின் இலக்கணமும் மொழியி னிலக்கணமும் பரம் |